Vishal - உதவி கேட்டு வந்த மாணவி.. டேய் முதலில் சாப்பாடு போடுடா.. உதவியாளரை திட்டிய விஷால்
சென்னை: Vishal (விஷால்) தந்தை இறந்ததால் மாணவி ஒருவர் விஷாலிடம் உதவி கேட்டு வந்தார். அவரிடம் நீ ஐஏஎஸ் ஆஃபிசர் ஆக வேண்டுமென விஷால் கேட்டுக்கொண்டார்
செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் இதுவரை 34 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர். இன்னும் சொல்லப்போனால் அவரிடம் சென்று உங்களின் கடைசி ஹிட் படம் எது என்று கேட்டால் அவருக்கே நியாபகம் இல்லாத நிலைதான் நீடித்தது. ஆனால் அந்த நிலையை அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி படம் மாற்றியிருக்கிறது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருக்கிறது. வசூலும் நூறு கோடி ரூபாய்வரை சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விஷால் கரியரில் அவரே எதிர்பார்க்காத வெற்றி மார்க் ஆண்டனி மூலம் கிடைத்திருக்கிறது.
ஹரி படம்: மார்க் ஆண்டனி படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்க விஷால் கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடந்துவருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டடித்ததால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
உதவும் விஷால்: இதற்கிடையே விஷால் நடிப்பது மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார்.குறிப்பாக ஆதரவு இல்லாத மாணவ, மாணவிகளின் கல்விக்கு தன்னால் என்ன முடியுமோ அதை தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல் விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்டோருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்துவருவது பாராட்டை பெற்றுவருகிறது.
மாணவிக்கு உதவி: இந்நிலையில் மாணவி ஒருவரின் தந்தை இறந்ததால் அந்த மாணவி கல்விக்கு உதவி கேட்டு விஷாலை அணுகினார். அவருடன் சில விவசாயிகளும் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் வந்த நேரம் விஷால் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர் வரும்வரை மாணவி உள்ளிட்டோர் காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து வந்த விஷால் வந்தவுடன் சாப்பிட்டீர்களா என கேட்டார்.
அதற்கு அவர்கள் இல்லை என சொல்ல தனது உதவியாளரிடம் டேய் லூசு முதல சாப்பாட போடுடா என்று கோபமடைந்து சாப்பிட வைத்தார். பிறகு அந்த மாணவியிடம் உன்னை படிக்க வைத்தால் நீ ஐஏஎஸ் ஆஃபிசர் ஆவியா என அன்புடன் கேட்க மாணவியும் ஆம் என்றார். பிறகு அவரது படிப்புக்கான அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் விவசாயிகளும் சில உதவிகளை கேட்க அதையும் அவர் கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











