அவரே செய்யும்போது நான் ஏன் செய்யக்கூடாது.. நடிகர் சுஷாந்த் சிங்கால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங், கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

34 வயதான நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

7 படங்கள் நீக்கம்

7 படங்கள் நீக்கம்

உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்த நடிகர் சுஷாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது மரணத்திற்கு பாலிவுட்டில் பெரும் தலைகள்தான் காரணம் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுஷாந்த் சிங்கை கடந்த 6 மாதங்களில் 7 படங்களில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மேலும் எந்த பார்ட்டிகளிலும் அவரை சேர்த்துக்கொள்ளாமல் ஓரங்கட்டியதாகவும் தெரிகிறது. இதுவே அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என்றும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தற்கொலை செய்தியை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரே செய்யும் போது..

அவரே செய்யும் போது..

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் சுபாஷ் நகரை சேர்ந்த அந்த பத்தாம் வகுப்பு மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலை கடிதத்தில், அவரே தற்கொலை செய்து கொள்ளும் போது நான் ஏன் செய்து கொள்ளக் கூடாது என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

Recommended Video

Sushant Singh குடும்பத்தில் மீண்டும் ஒரு உயிரிழப்பு | Sister in law
அப்பாவுக்கு கடிதம்

அப்பாவுக்கு கடிதம்

மேலும் நம் குடும்பத்தில் முதலில் பெண் குழந்தை பிறந்தால் அது நான் மறுபிறவி எடுத்து வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்த மாணவர் ஒரு பெண்ணை போன்று நடந்து கொண்டதால் அவரை சக மாணவர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X