இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுடன் ஒருநாள்… தமிழில் ட்வீட் போட்ட சச்சின்

மும்பை: கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து தரமான படங்களுக்கு இசையமைத்து பிஸியாக இருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.

கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் படங்களின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.

இந்நிலையில், மும்பை சென்ற ஏஆர் ரஹ்மான் அங்கு முன்னாள் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.

என்றும் இசைப்புயல்

என்றும் இசைப்புயல்

1992ல் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் புயலகா சுழன்றடிக்கத் தொடங்கிய ஏஆர் ரஹ்மான், 30 ஆண்டுகளாக இந்திய சினிமாவின் பெருமையாக திகழ்ந்து வருகிறார். தேசிய விருதுகள், ஆஸ்கர் விருதுகள் என இந்திய அளவிலும் சர்வதசே தரத்திலும் பல சாதனைகளை படைத்துள்ள ஏஆர் ரஹ்மானுக்கு இந்த வருடமும் சூப்பராக அமைந்துள்ளது. விக்ரமின் கோப்ரா, சிம்புவிற்கு வெந்து தணிந்தது காடு, மணிரத்னம் உடன் பொன்னியின் செல்வன் என பாடல்களிலும் பின்னணி இசையிலும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து அசத்தியுள்ளார்.

சச்சினுடன் ஃப்ரண்ட்ஷிப்

சச்சினுடன் ஃப்ரண்ட்ஷிப்

ஏஆர் ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் ரொம்பவே முக்கியமானவர். தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக கொண்டாடப்படும் சச்சின், ஏஆர் ரஹ்மானின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளனர். ஏற்கனவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் பற்றி ரொம்ப பெருமையாக பேசி வீடியோ அனுப்பியிருந்தார் சச்சின். இருவருக்குள்ளும் அப்படியொரு நெருக்கமான நட்பு உண்டு.

மும்பையில் சந்திப்பு

மும்பையில் சந்திப்பு

ஏஆர் ரஹ்மான், சச்சின் இருவருமே பார்ப்பதற்கு அண்ணன், தம்பி மாதிரியே இருப்பார்கள். பேசுவதாகட்டும், எளிமையாக இருப்பது, உருவம், உயரம் என எல்லாவற்றிலும் இருவருக்கும் செம்மையாக மேட்ச் ஆகும். இந்நிலையில், மும்பை சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், கிரிக்கெட் வீரர் சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ஒருநாள் முழுவதும் இருவரும் ஒன்றாக நேரம் செலவழித்துள்ளனர். சச்சினுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஏஆர் ரஹ்மான், மாஸ்டர் பிளாஸ்டருடன் 'பிரண்ட்ஷிப் கோல்ஸ்' என்ற கேப்ஷனில் பதிவிட்டிருந்தார். இருவரும் க்யூட்டாக இருக்கும் இந்தப் போட்டோவும் ரஹ்மானின் ட்விட்டர் போஸ்ட்டும் ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆனது.

தமிழில் ட்வீட் செய்த சச்சின்

தமிழில் ட்வீட் செய்த சச்சின்

இதனையடுத்து ஏஆர் ரஹ்மானின் ட்வீட்டர் பதிவுக்கு சச்சினும் செம்ம ஸ்மார்ட்டாக ரீப்ளே செய்துள்ளார். "A Sunday well spent with இசைப்புயல்!" என தமிழில் ட்வீட் செய்து, ஏஆர் ரஹ்மானின் போஸ்ட்டையும் டேக் செய்துள்ளார். இசைப்புயல் என சச்சின் தமிழில் ட்வீட் செய்துள்ளது, தமிழ் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏஆர் ரஹ்மான், சச்சின் இருவருக்கும் இடையேயான நட்பு, அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 2017ல் சச்சினின் பயோபிக்காக வெளியான 'Sachin: A Billion Dreams' படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X