»   »  புத்தாண்டில் குத்தாட்டம் போட சன்னிலியோனுக்கு ரூ.5 கோடி சம்பளமாம்!

புத்தாண்டில் குத்தாட்டம் போட சன்னிலியோனுக்கு ரூ.5 கோடி சம்பளமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஸ்டார் ஓட்டல்களில் நடனம் ஆட ஹீரோயின்கள் தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறது.

பெரும்பாலும் பாலிவுட் ஹீரோயின்களுக்கு இதற்கான சான்ஸ் கொட்டிக்கொண்டிருக்கிறது. சில தென்னிந்திய ஹீரோயின்களுக்கும் அழைப்பு வந்திருக்கிறது.

பிரதமர் மோடியை விட அதிகமாக கூகுளில் தேடப்பட்டவர் என்ற பெருமையை பெற்றவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் புத்தாண்டு தின இரவு நடனமாடுகிறார்.

இவர் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் 31ஆம் தேதி இரவு புத்தாண்டு நடனம் ஆட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதற்காக இவருக்கு ரூ.5 கோடி சம்பளம் தர ஓட்டல் நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகளால் பிற நடிகைகளின் காதில் புகைதான் வருகிறது.

சன்னிலியோன்

சன்னிலியோன்

புத்தாண்டு நடனத்திற்கு சன்னிலியோனுக்கு அதிகம் அழைப்பு வரவே அவர் கேட்ட சம்பளத்தை தர ஒப்புக்கொண்டுள்ள ஸ்டார் ஹோட்டலில் நடனமாட முடிவு செய்துள்ளாராம்.

வடகறியில் குத்தாட்டம்

வடகறியில் குத்தாட்டம்

வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடியதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் காலடி எடுத்து வைத்த சன்னிலியோன், கரண்ட் தேஜா என்ற தெலுங்கு படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இதில் ஒரு பாடலுக்கே பலகோடி சம்பளம் வாங்கினார் சன்னிலியோன்

புத்தாண்டு குத்தாட்டம்

புத்தாண்டு குத்தாட்டம்

2015 புத்தாண்டு தின பிறப்பை ஒட்டி ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டுக்கு முந்தைய தினம் டிசம்பர் 31ஆம் தேதி இரவில் நடனம் ஆடவுள்ளார்.

ரூ. 5கோடி சம்பளம்

ரூ. 5கோடி சம்பளம்

சன்னி லியோன் ஆடுவதை நிகழ்ச்சியை நடத்தும் மேனேஜர் உறுதி செய்தார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

சன்னி பாட்டுதான்

சன்னி பாட்டுதான்

சன்னி லியோன் நடித்த படங்களின் பாடல்களுக்கு குத்தாட்டம் போட உள்ளார். இதற்காக தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.

சும்மா களைகட்டும்ல

சும்மா களைகட்டும்ல

சன்னியின் வருகையால் இந்த ஹேட்டலில் புத்தாண்டு தின இரவை கொண்டாட வரும் இளசுகள் கூட்டம் சும்மா களை கட்டுமாம். அவருக்கு கொடுத்த சம்பளத்தை விட இருமடங்கு சம்பாதித்து விடலாமாம்.

English summary
Sunny Leone will be performing at a convention hall in Jubilee Hills this New Year’s Eve. Confirming the news, Sainath Goud from PX and RnH event management company says, “Sunny will reach Hyderabad on December 31. She will dance to songs from her own films.
Please Wait while comments are loading...