அஜித்திற்கு அடுத்து இவர்தான்.. போனி கபூரை கவர்ந்த இளம் நடிகர்.. அடுத்த ரீமேக் ரெடி!
சென்னை: தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் போனி கபூர் கோலிவுட் நடிகர் ஒருவரின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார்.
நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி வெற்றிகரமாக இன்னும் பல தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் இது.
அந்த படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு நேர்கொண்ட பார்வை வெளியானது. படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

எப்படி
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்தார். அதேபோல், அஜித் நடிக்கும் அடுத்த இரண்டு படங்களையும் இவர்தான் தயாரிக்க உள்ளார். அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் எச்.வினோத்தான் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் அறிமுகம்
அஜித் நடிக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ஹிந்தி படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். இந்த நிலையில் போனி கபூர் தற்போது இன்னொரு தமிழ் நடிகரின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார்.

செம நடிப்பு
நடிகர் ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்த படம் பல்வேறு தரப்புகளில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஜெயம் ரவிக்கும் இரண்டு தொடர் தோல்விகளை தொடர்ந்து இந்த படம் பெரிய பிரேக்காக அமைந்தது.

பிடித்த படம்
இந்த நிலையில் போனி கபூர் இந்த படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து வியந்துள்ளார். அவரை அழைத்து இது தொடார்பாக பாராட்டியும் இருக்கிறார் என்கிறார்கள். இதெல்லாம் போதாது என்று கோமாளி படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் அவர் வாங்கிவிட்டாராம்.

உரிமை
ஆம், கோமாளி படத்தை போனி கபூர் இந்தியில் தயாரிக்க உள்ளார். இந்தி நடிகர் அர்ஜுன் கபூர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் சில தமிழ் படங்களை இவர் இந்தியில் எடுக்க உள்ளார் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











