நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!

Recommended Video

PM Nithyananda | நித்யானந்தா செய்யும் அலப்பறைகள் ..!

சென்னை: நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு தமிழ் நடிகை ஒருவர்தான் பிரதமராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா குழந்தை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 30 சிஷ்யைகளுடன் அவர் அந்த தீவில் இருப்பதாகவும், மேலும் டன் கணக்கில் தங்கத்தை கொண்டு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கைலாசா நாடு

கைலாசா நாடு

அந்த தீவை விலைக்கு வாங்கியுள்ள நித்தியானந்தா அதனை தனி நாடாக அறிவிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. அந்த தீவிற்கு கைலாசா நாடு என பெயரிட்டுள்ள நித்தியானந்தா, தனது நாட்டிற்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார்.

பாஸ்போர்ட் விசா

பாஸ்போர்ட் விசா

அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட், விசா என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கைலாசா நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவரது வெப் ஸைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனி ராஜாங்கம்

தனி ராஜாங்கம்

மேலும் தனது நாட்டில் குடிமகனாக இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தன்னை அந்நாட்டிற்கு அதிபர் என அறிவித்து தனி ராஜாங்கம் அமைத்து வருகிறார் நித்தியானந்தா.

தமிழ் நடிகைதான் பிரதமர்

தமிழ் நடிகைதான் பிரதமர்

இந்நிலையில் தனது நெருங்கிய சிஷ்யையான தமிழ் நடிகை ஒருவரைதான் அந்த நாட்டிற்கு பிரதமராக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக விரைவில் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் பறக்கின்றன.

இங்குதான் இருக்கிறார்

இங்குதான் இருக்கிறார்

ஆனால் நித்தியானந்தா வெளிநாட்டிற்கெல்லாம் ஓட வில்லை, இந்தியாவில்தான் இருக்கிறார். நெருங்கிவிட்டோம் விரைவில் பொறி வைத்து பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர் போலீசார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X