சுஷாந்தால் பாலிவுட்டில் பிரபலமான தமிழ் வார்த்தை "சரி".. டிவிட்டரிலும் ட்ரெண்டிங்!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தால் தமிழ் வார்த்தையான சரி பாலிவுட்டில் பெரும் பிரபலமாகியுள்ளது.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படமான தில் பெச்சாரா நேற்று ஓடிடி தளத்தில் ரிலீஸானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தில் பெச்சாரா படத்தில் சுஷாந்த் சிங் ரஜினி ரசிகர் நடித்துள்ளார். அறிமுக நடிகையான சஞ்சனா சங்கியும் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள்
ஏற்கனவே இப்படத்தில் ரஜினிக்காந்தை வணங்குகிறேன் என்றும் அவருடைய டை ஹார்ட் ஃபேன் என்று கூறியும் ரஜினி ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார் சுஷாந்த் சிங். ரஜினி குறித்து பல இடங்களில் பேசப்பட்டுள்ளதால் தில் பெச்சாரா படத்தை தமிழ் ரசிகர்களும் திரும்பி பார்க்கும் படி செய்துள்ளனர்.

தமிழ் என்ற சரி
இந்நிலையில் சுஷாந்த் சிங்கால் தமிழில் பயன்படுத்தப்படும் சரி என்ற வார்த்தையும் பாலிவுட்டில் பிரபலமாகியுள்ளது. ஓகே என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகராகவும் சம்மதத்தை தெரிவிக்கும் வகையிலும் பல இடங்களில் சரி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

அர்த்தம் கேட்கும் காதலி
இந்நிலையில் சுஷாந்த் சிங்கும் படத்தின் பல இடங்களில் சரி என்ற வார்த்தையை பயன்படுத்துவார். தனது காதலியான சஞ்சனா சங்கியிடமும் அந்த வார்த்தையை பயன்படுத்துவார் சுஷாந்த். அப்போது அதற்கு அர்த்தம் கேட்பார் சஞ்சன சங்கி.

படம் முழுக்க சரி
அர்த்தத்தை கேட்டப்பின், சரி என்பது இனிமேல் நம்முடைய வார்த்தை என்பார். அதன்பிறகு வரும் காட்சிகளில் ஓகே சொல்லும் இடங்களில் எல்லாம் சரி என்றே கூறுவார் சஞ்சனா. ரஜினிகாந்ததை போன்றே சரி என்ற வார்த்தையும் படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரசிகர்கள் கமெண்ட்
இதனை பெருமையாக பார்த்து வருகின்றனர் தமிழ் ரசிகர்கள். இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் ஒரு ரஜினி ரசிகராகவும், தமிழ்நாட்டிலிருந்து இந்த படத்தைப் பார்க்கும்போது கூடுதல் சிறப்பாக உணர்கிறேன் ..
என் கண்ணீரை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை
நீங்கள் மிஸ் பண்ணப்படுவீர்கள்.. நீங்கள் இறக்கவில்லை என நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். #seri என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











