முரண்டுபிடிக்காம கையில காண்டம் கொண்டு போங்க.. உயிர் பிழைக்கலாம்.. இயக்குநரின் தெனாவட்டு பேச்சு!

ஹைதராபாத்: பாலியல் பலாத்காரத்துக்கு உட்படும் பெண்கள் முரண்டு பிடிக்காமல் ஒத்துழைத்தால் கொலை செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என தெலுங்கு இயக்குநர் ஒருவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக்கொல்ல வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. நாடாளுமன்றத்திலும் இந்த சம்பவம் எதிரொலித்தது.

மோசமானது அல்ல

மோசமானது அல்ல

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தன்னை சினிமா இயக்குநர் என்று கூறிக்கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில் தெரிவித்திருப்பதாவது, பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமானது அல்ல.

தண்டனைகள் காரணம்

தண்டனைகள் காரணம்

ஆனால், கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள்.

அதுதான் ஒரு வழி

அதுதான் ஒரு வழி

வன்முறையற்ற பலாத்காரம் மட்டும்தான் பாதிக்கப்படும் பெண்களை கொடூரமாக கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு பெண்கள் அமைப்புகள்தான் காரணம்.

கையில் காண்டம்..

பெண்கள்தான் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்கள் எப்போதும் கையில் காண்டம் வைத்துக்கொள்ளுங்கள். பாலியல் வன்கொடுமை செய்ய முற்படுபவர்களிடம் காண்டத்தை கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.

ஆசை நிறைவேறிவிட்டால்

ஆண்களுக்கு பாலியல் ஆசை நிறைவு அடையும்போது அவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்யமாட்டார்கள். பாலியல் வன்கொடுமைதானே என்று காவல்துறையும், பெண்கள் அமைப்பும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் கொலையெல்லாம் நடக்காது என தெரிவித்துள்ளார்.

சின்மயி கடும் கண்டனம்

அவருடைய இந்த பதிவு தீயாய் பரவி வருகிறது. அவரது இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் பாடகி சின்மயி, டேனியலின் இந்த பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X