'என் தலைவர் விஷாலை தப்பா பேசினே... அவ்ளோதான்!' - பிரபல தயாரிப்பாளரை மிரட்டிய ரவுடி!

By Shankar

விஷாலின் ரசிகர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு குரல் பதிவு மூலம் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சியை ஒரு நபர் ரவுடியைப் போல மிரட்டியுள்ளார்.

கடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிரணியில் நின்று துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர் சுரேஷ் காமாட்சி. தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்காக துணிச்சலாகக் குரல் கொடுத்து வருபவர்.

A thug threats Producer Suresh Kamatchi in the name of Vishal

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு இரு தினங்கள் இருந்த போது ரஜினி, கமலை வரவழைத்து நடிகர் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதாக விஷால் அறிவித்தபோது, அதைக் கடுமையாக எதிர்த்தார்.

'ரஜினி, கமலை வரவழைத்து பெரிய பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து தயாரிப்பாளர் சங்க தேர்தலை தன் பக்கம் திருப்புகிறார்... முறையாக அனுமதி பெறாத ஒரு கட்டடத்துக்கு அடிக்கல் நாட்ட ரஜினி, கமல் வரலாமா? ' எனக் கேட்ட சுரேஷ் காமாட்சி, ரஜினி, கமலுக்கு தனித்தனியாக கடிதமும் எழுதினார். ஆனால் மீறி இருவருமே வந்து கலந்து கொண்டனர்.

இந்த நிலையில்தான், நடிகர் சங்க கட்டட திட்டத்தில் பொது இட ஆக்கிரமிப்பு உள்ளதை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு இடைக்காலத் தடை விதித்துவிட்டது.

தீர்ப்பைக் கேட்டதும், இது குறித்து தன் கருத்தைத் தெரிவித்த சுரேஷ் காமாட்சி, "இப்படி ஒரு அவமானம் வேண்டாம் என்றுதான் அன்றைக்கே ரஜினி, கமல் இருவரும் இந்த விழாவுக்குப் போகக் கூடாது என்று அடித்துக் கொண்டேன்.

A thug threats Producer Suresh Kamatchi in the name of Vishal

இந்த நாடக விழாவைக் கண்டு ஏமாந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் தாரை வார்த்துவிட்டோம். இந்த தாரை வார்த்தலுக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அடிக்கல் நாட்டுவிழாதானே... அடித்துப் பிடித்து நடத்திய அந்த நாடகத்தின் பங்கு அதில் அதிகம்.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கூடாது என்பது என் எண்ணமில்லை. நடிகர் சங்கத்தின் கட்டிடம் எனக்கும் பேராவல்தான். ஆனால் முறைப்படியான விழா அது இல்லை என்பதை உறுதியாகச் சொன்னேன்..

இன்று அடிக்கல் நாட்டியாயிற்று. ஆனால் நீதியோ தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது.. எவ்வளவு பெரிய அவமானம்?" என்று கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு, விஷாலின் ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டு அடுத்தடுத்து சிலர் சுரேஷ் காமாட்சிக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளனர். விசாரித்ததில் அவர்கள் சொன்ன பெயர் மற்றும் ஊர்கள் அனைத்துமே பொய் என்பது தெரியவந்தது. இன்னொரு நபர் விஷால் பெயரைச் சொல்லி சுரேஷ் காமாட்சியை கடுமையாக மிரட்டிப் பேசியுள்ளார். அந்த ஆடியோ இங்கே தரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விஷாலை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் ஒருவர் பேசிய போது, அவரும் கடுமையாக மிரட்டப்பட்டார். சங்கத்திலிருந்தே தூக்கப்படுவார் என எச்சரிக்கப்பட்ட நிலையில், இப்போது செல்வாக்கு மிக்க ஒரு தயாரிப்பாளரையே விஷால் பெயரைச் சொல்லி மிரட்டியுள்ளனர். இது விஷாலுக்குத் தெரிந்து நடக்கிறதா? என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விஷால் மற்றும் அவரது ரசிகர் மீது போலீசில் புகார் தர சுரேஷ் காமாட்சி முடிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X