மீண்டும் வந்து என் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன்.. கொஞ்சமும் உற்சாகம் குறையாத நடிகர் மோகன்!
சென்னை: மீண்டும் வந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன் என நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாலு மகேந்திராவால் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் தான் மைக் மோகன் என்ற மோகன் ராவ். இந்த படம் 175 நாட்கள் ஓட தனது முதல் படத்திலே வெள்ளி விழா கொண்டாடினர் மோகன்.இதன் பின் தென்னிந்திய அணைத்து மொழி படங்களில் நடித்தார் மோகன்.இவருக்கு தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் மூடுபனி. அக்காலத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரைபடங்களுக்கு நிகராக இவர் திரைப்படம் இருந்தது.

இதன் பின் இவர் நடித்த திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடின,இதனாலே இவருக்கு வெள்ளி விழா நாயகன் என்று பெயர் வந்தது.இவர் தமிழில் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 365 ஓடின இப்படம் தான் இவரின் திரைப்பயணத்தின் ஆரம்பம். மற்றும் இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் 500 நாட்கள் கடந்து சாதனை படைத்தது. இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. மோகன் திரை பயணத்தில் இவர் உச்சம் தோட்டத்துக்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜா, இவர் மோகன்க்காக அமைத்த அனைத்து பாடல்ககளும் ரசிகர்களிடையே இவரை கொண்டுபோய் சேர்த்தன.
பின்னர் மோகன் உச்சம் தோட்ட காலம் இவர் நடித்த படங்கள் வரிசையாக வெள்ளி விழா கொண்டாடின. இவருக்கு தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் விதி, இப்படம் 300 நாட்களை கடந்து சாதனை படைத்தது. மற்றும் மணிரத்னம் இயக்கி மோகன் ரேவதி நடித்து பெரும் வெற்றி பெற்ற மௌன ராகம் திரைப்படம் இன்றளவும் ம் மனதில் நிற்கின்றன. 1990க்கு பிறகு இவர் எங்கே போனார் என்ன ஆனார் என்பது இவரது ரசிகர்கள் அல்லாது திரை ரசிகர்களின் கேள்வியும் அதுதான்.
1990க்கு பிறகு 2017 வரை இவர் நடித்த திரைப்படங்கள் வெறும் ஆறு தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்கள் சந்திப்பில் மோகன் கூறியதாவது, என்னை உயர்த்தியது பல வெற்றிகளை கொடுத்தது எல்லாம் என் ரசிகர்கள் தான். பல கதைகள் வருகின்றன நான் நடிப்பதற்கு ஏற்றவாறு கதை இல்லை, தற்போது ஒரு கதை கேட்டுள்ளேன் அது என் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த வருடத்தில் அந்த படத்தில் நடிக்கிறேன். கண்டிப்பாக நான் மீண்டும் வந்து என் ரசிகர்களை சந்தோஷப்படுவேன் என்று மகிழ்ச்சியாக கூறினார்.


Click it and Unblock the Notifications











