மீண்டும் இணையுமா யுத்தா பூமி கூட்டணி.. மகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Recommended Video
ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியும் நடிகை விஜயசாந்தியும் நிகழ்ச்சியில் ஒன்றாக தோன்றியதை தொடர்ந்து அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்
சீரஞ்சிவி. ஆந்திராவின் உச்ச நட்சத்திரங்களான
என்.டி.ஆர் மற்றும் நாகேஸ்வர ராவ்க்கு பிறகு ஆந்திராவில் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் சேர்ந்த ஒரு ஹீரோ தான் சீரஞ்சிவி. இவர் பிரனம் கரேடு படம் முலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

இவர் நடித்த அனைத்து படங்களும் வரிசையாக ஹிட் ஆக தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக மாறினார் சீரஞ்சிவி. இவர் நடித்த முட்டா மேஸ்திரி படம் பட்டி தொட்டி எங்கும் இவரை கொண்டு சேர்த்தது. தெலுங்கு சினிமாவில் எத்தனை நடிகர்கள் இவர் நடித்த காலத்தில் வந்தாலும் இவரை மீஞ்ச முடியவில்லை.
படங்களில் நடித்த பிறகு அரசியல் கட்சி தொடங்கினார் சீரஞ்சிவி. பின் அதில் இருந்து விடுபட்டு மீண்டும் தனது 150 திரைபடத்தில் நடித்து சினிமா பக்கம் திரும்பினார். இவரை ஆந்திரா மக்கள் அரசியலில் விரும்பாமல் போனாலும் ஒரு நடிகராக இவரை ஆந்திரா மக்கள் இன்னமும் ரசித்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அவர் திரும்பி நடிக்க வந்து நடித்த முதல் திரைப்படம் கைதி 150. இந்த திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்ற சீரஞ்சிவி தன்னுடன் நடித்த நடிகை விஜயசாந்தியை சந்தித்து பேசினார் பல வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேசியது ஆந்திரா திரை ரசிகர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பட விழாவில் இருவரும் சந்தித்தாலும் இது பல செய்தியை உருவாக்கி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்க போகிறார்கள் என்ற ஒரு செய்தியும் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











