சிகப்பு ரோஜாக்கள் 2வில் சிம்புவுடன் சேரும் உச்ச நடிகர்? தீயாய் பரவும் தகவல்.. பரபரப்பில் கோலிவுட்!

சென்னை: சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவுடன் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர்.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த மிரட்டல் படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.

லீடிங் ரோலில் சிம்பு

லீடிங் ரோலில் சிம்பு

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயக்கவுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்தப் படத்தில் லீடிங் ரோலில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் சிம்புவுடன் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு படம் குறித்த அறிவிப்பை தனது தந்தை வெளியிடுவார் என மனோஜ் கூறியிருந்தார்.

ஸ்பெஷல் ரோல்

ஸ்பெஷல் ரோல்

சிகப்பு ரோஜாக்கள் போன்ற ஒரு கதையம்சம் கொண்ட படமான மன்மதன் படத்தில் சிம்பு ஏற்கனவே நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் கமலுக்கு ஏன் ஒரு முக்கிய கேரக்டர் ஸ்பெஷலாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் படமாக இருக்கும்..

முதல் படமாக இருக்கும்..

மனோஜ் பாரதிராஜா திட்டமிட்டப்படி எல்லாம் நல்லபடியாக நடக்கும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஒருவேளை கமலும் சிம்புவும் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இணைந்தால் அதுவே இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இருக்கும்.

இந்தியன் 2

இந்தியன் 2

அப்படி நடந்தால் அது சிம்பு ரசிகர்களுக்கும் சரி கமல் ரசிகர்களுக்கும் சரி பெரிய ட்ரீட்டுதான். ஏற்கனவே கமலின் இந்தியன் 2 படத்தில் சிம்பு போலீஸ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களுக்காக அது நடக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X