பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தை கட்டியணைத்தப்படி காத்திருக்கும் மைக்.. வைரலாகும் டச்சிங் கார்ட்டூன்!

சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியத்தை அவர் கையில் இருக்கும் மைக் கட்டியணைத்தப்படி கவலையுடன் இருக்கும் டச்சிங் கார்ட்டூன் வைரலாகி வருகிறது.

Recommended Video

பாலு சீக்கிரம் எழுந்து வா! இளையராஜா உருக்கம் • SPB in Hospital | Filmibeat Tamil

பிரபல பின்னணி பாடகரான எஸ் பி பாலசுப்ரிமணியம் கடந்த 5ஆம் தேதி லேசான கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டு வந்த மருத்துவமனை நிர்வாகம் நேற்று, எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்ததாக அறிக்கை வெளியிட்டது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

நேற்று முன்தினம் இரவு முதல் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் வென்ட்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தது.

உடல்நிலையில் முன்னேற்றம்

உடல்நிலையில் முன்னேற்றம்

எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்த மருத்துவமனையின் இந்த அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் உடல்நிலை சீராக உள்ளது என்றும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பி சரன் தெரிவித்தார்.

கார்ட்டூன் வைரல்

கார்ட்டூன் வைரல்

எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிக பெருமக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியமும் மைக்கும் இருக்கும் கார்ட்டூன் ஒன்று வைரலாகி வருகிறது.

கெட் வெல் சூன்

கெட் வெல் சூன்

அதாவது எஸ்பி பாலசுப்ரமணியம் கையில் இருக்கும் மைக் அவரை சோக முகத்துடன் கட்டியணைத்தப்படி விரைவில் குணமடைந்து வாருங்கள் எஸ்பிபி சார் என்று சொல்வதாகவும், அதற்கு சிரித்தப்படியே எஸ் அஃப் கோர்ஸ் என எஸ்பி பாலசுப்ரமணியம் சொல்வதாகவும் உள்ளது அந்த கார்ட்டூன்.

கவலையில் மைக்

கவலையில் மைக்

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் பாடல்களை பாட பயன்படுத்தும் மைக் பெரும் கவலையில் உள்ளதாக காட்டுகிறது அந்த கார்ட்டூன். இந்த கார்ட்டூனை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

டச்சிங் கார்ட்டூன்

டச்சிங் கார்ட்டூன்

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் முகமதலி, வெரி டச்சிங் கார்ட்டூன் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலரும் எஸ்பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என அவருடைய பாடல்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X