Mark Antony: விஷால் இப்படி செய்யலாமா? மார்க் ஆண்டனி படத்துக்கு வந்த புது சிக்கல்!

சென்னை: மார்க் ஆண்டனி படத்தில் திருநங்கைகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற தோல்வியை மட்டுமே பார்த்து வந்த விஷால்.

இப்போது மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார்.

A transgender woman has lodged a complaint with the Coimbatore Police Commissioners office seeking a ban on the Mark Antony film

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷாலுடன் எஸ் ஜே சூர்யா இணைந்து மிரட்டி இருக்கும் இப்படம் தான் மார்க் ஆண்டனி. சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் நகைச்சுவை சரவெடிக்கு இத்திரைப்படம் பஞ்சமே இல்லாமல் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது. அதனாலேயே இப்போது ரசிகர்கள் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

நல்ல கலேக்ஷன்: அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிணிட்டு வெளியான இத்திரைப்படம், விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என அடுத்தடுத்த நாட்களில் மார்க் ஆண்டனியின் கலெக்சன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியது. அதன்படி முதல் நான்கு நாட்களிலேயே இப்படம் 51 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

விஷாலுக்கு கம்பேக்: நேற்று செவ்வாய்கிழமையாக இருந்த போதிலும், திரையரங்குகளில் 75 சதவீத இருக்கைகள் நிறைந்திருந்தது. அந்த அளவுக்கு மார்க் ஆண்டனி ஒட்டு மொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் கவர்ந்திருக்கிறது. விஷாலின் திரைப்பயணத்தில் இந்த படம் அவருக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

விஷால் இப்படி செய்யலாமா: இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் திருநங்கைகள் LGBT சமூக மக்களை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்படிப்பட்ட காட்சிகள் திருநங்கைகளை கேளிக்கை பொருளாகவும் நகைச்சுவையாகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாகவும்.

புது சிக்கல்: இது போன்ற திரைப்படங்களினால் திருநங்கைகளின் முன்னேற்றம் 10 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுவதாகவும் எனவே இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் மற்றும் இயக்குனர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவையை சேர்ந்த திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X