நள்ளிரவில் 'அன்பான' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!
சென்னை: நடிகை நயன்தாராவின் பெயர் உள்ள டிவிட்ட கணக்கில் இருந்து நள்ளிரவில் செல்பியுடன் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா, நானும் ரடிவுதான் படத்தில் நடித்த போது அதன் இயக்குநரான விக்னேஷ் ஷிவனுடன் காதல் கொண்டார்.
இருவரும் லிவிங் டூ கேதரில் வசிப்பதாகவும் ஏற்கனவே எளிமையாக ரகசிய திருமணம் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

போட்டோக்கள் ட்ரென்ட்
இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகின்றனர். அந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி இளைஞர்களை வெறுப்பேற்றும். கடந்த சில நாட்களாய் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் பல போட்டோக்கள் ட்ரென்ட்டாகி வருகிறது.

நயன்தாரா டிவிட்டர்
அவர்களின் போட்டோக்கள் ஒன்று விக்னேஷ் சிவனின் இன்டாகிராமில் இருந்து ஷேர் செய்யப்படுகிறது. மற்றொரு டிவிட்டரில் உள்ள @NayantharaU என கணக்கிலிருந்து ஷேர் செய்யப்படுகிறது. ஓணம் கொண்டாட்டமாக இருக்கட்டும், கோவாவில் பூப்பறிப்பதாக இருக்கட்டும் எல்லாமே இந்த அக்கவுண்டில் இருந்துதான் வெளியாகிறது.

ரசிகர்கள் குழப்பம்
ஆனால் நடிகை நயன்தாரா தனக்கு டிவிட்டரில் அக்கவுண்ட்டே இல்லை என பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் அவரது போட்டோக்கள் இந்த அக்கவுண்டில் இருந்து வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

நள்ளிரவில் வாழ்த்து
இந்நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், நயன்தாரா பெயரில் உள்ள அதே அக்கவுண்டில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பான விக்கி
நயன்தாரவும் விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருக்கும் செல்பியுடன், பிறந்தநாள் வாழ்த்துகள் டூ அன்பான விக்கி.. எப்போதும் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்.. கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சுமார் 19ஆயிரம் பேர் வரை லைக் செய்துள்ளனர்.

25 லட்சம் ஃபாலோயர்ஸ்
இதேபோல் விக்னேஷ் சிவன் ஷேர் செய்த ரொமான்டிக் போட்டோவும் இந்த அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கை 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











