சுயமா முடிவு எடுங்க.. டுபாக்கூரா இருந்தாலும் தெளிவாதான்ய்யா இருக்காரு பாலாஜி.. வைரலாகும் அன்சீன்!

சென்னை: பாலாஜி முருகதாஸ் வேல்முருகனுக்கு நச் அட்வைஸ் கொடுக்கும் அன்சீன் வீடியோ தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் பல அன் சீன்காட்சிகள் விஜய் மியூஸிக் சேனலில் ஒளிப்பரப்படுகிறது.

அதோடு சமூக வலைதளங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன் சீன் காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெறுவதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

சண்டைப் போட்ட வேல்முருகன்

சண்டைப் போட்ட வேல்முருகன்

இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் ஒன்றின் காட்டப்படாத காட்சி வைரலாகி வருகிறது. அதாவது நேற்று முன்தினம் வேட்டி விஷயத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக தவறாக புரிந்து கொண்டு அவருடன் மல்லுக்கு நின்றார் வேல்முருகன்.

கெடுத்துக்கொண்ட வேல்முருகன்

கெடுத்துக்கொண்ட வேல்முருகன்

சுரேஷ் சக்கரவர்த்தி வேல் முருகனை பற்றி எதுவும் சொல்லாமல் ரியோவை பற்றி மட்டும்தான் பேசினார். ஆனால் வேல்முருகன் சுரேஷ் தன்னை கேவலமாக பேசி, மொத்த மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

அன்சீன் வீடியோ

அன்சீன் வீடியோ

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த வேல்முருகன் அடுத்த நாள்தான் அந்தப் பிரச்சனையை கிளப்பினார். இதனால் இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு யாரோ ஏற்றிவிட்டுள்ளனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

சுயமா முடிவு எடுங்க

சுயமா முடிவு எடுங்க

அதாவது வாஷ் ரூமில் உள்ள வேல் முருகனிடம் பாலாஜி முருகதாஸ், நீங்கள் மெஜாரிட்டியை வைத்து முடிவு எடுக்காதீர்கள் சுயமாக முடிவு எடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதற்கு மெஜாரிட்டி என்றால் என்ன என வேல்முருகன் கேட்க.. அப்படி என்றால் எல்லோரும் எடுக்கும் முடிவை எடுப்பது என்று விளக்கம் கொடுக்கிறார் பாலாஜி,

மீண்டும் வேட்டி சண்டை

மீண்டும் வேட்டி சண்டை

அப்படி எடுக்க முடியாதுல்ல என்ற வேல் முருகனுக்கு, ஆமாம் அப்படி மெஜாரிட்டியை வைத்து முடிவெடுக்காதீர்கள், சுயமாக முடிவெடுங்கள் என நச்சென கூறியிருக்கிறார் பாலாஜி. அதற்கு மீண்டும் வேட்டி சண்டையை ஆரம்பிக்கிறார் வேல்முருகன்.

யார் பேச்சையும் கேட்காதீங்க

யார் பேச்சையும் கேட்காதீங்க

உடனே அதெல்லாம் வேண்டாம்.. கோபப்படாதீங்க அண்ணே இன்று நீங்கள் ரொம்ப கோபப்பட்டீங்க.. என்கிறார். சத்தியமா கோபப்படல.. என் குரலே அப்படிதான் என்கிறார் வேல் முருகன். சரி இனிமே சுயமா முடிவு எடுங்க என மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் பாலாஜி.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Wild Card Entry • October 2020
குரூப்பிசம் உள்ளது

குரூப்பிசம் உள்ளது

இந்த அன் சீன் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அடேய் யாருடா வேல்முருகனை தூண்டி விட்டது என கேட்டு வருகின்றனர். இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் சுரேஷுக்கு எதிராக மெஜாரிட்டியான குரூப்பிசம் உள்ளது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X