Kamal - கமல் ஹாசனின் காதலை பிரித்தது நடிகையின் அம்மாவா?.. பல வருடங்கள் கழித்து வெளியான சீக்ரெட்
சென்னை: உலக நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் கமல் ஹாசன். சிறு வயதிலிருந்தே நடித்து வரும் கமல் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கியவர். இருந்தாலும் அவர் அதை மறைக்கவோ மறுக்கவோ இல்லை. இந்த சூழலில்தான் நடிகை ஸ்ரீவித்யா அளித்த பழைய பேட்டி இணையத்தில் திடீரென்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக நடிப்பில் சிறந்தவர் என புகழப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். வெறும் நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். அதனால்தான் எத்தனை இயக்குநர்கள் வந்தாலும் நாங்கள் இப்போது செய்வதை கமல் சார் அப்போதே செய்துவிட்டார் என்று ஏகத்துக்கும் புகழ்வார்கள்.

இயக்கத்திலும் புதுமை: கெட்டப்புகளை மாற்றுவது, ஹீரோ என்ற இமேஜை உடைத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது என கமல் நடிப்பில் மட்டும் புதுமை செய்யவில்லை. அவர் இயக்கிய விருமாண்டி, ஹேராம் ஆகிய படங்களும் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க்காக இருக்கின்றன. குறிப்பாக விருமாண்டி படத்தின் திரைக்கதை புதுமையிலும் புதுமையாக இருந்தது. அதேபோல் அவர் கதை எழுதிய அன்பே சிவம் படமும் இன்றுவரை க்ளாஸிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் மட்டும் கில்லி இல்லை: கமல் ஹாசன் நடிப்பு, இயக்கம் என சினிமாவில் மட்டும் தனித்து தெரிபவர் இல்லை. தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்போதுமே தனித்துவமாக இருப்பவர். தீவிர கடவுள் மறுப்பாளரான அவர் மிகத்தீவிரமான வாசிப்பாளரும்கூட. அதேபோல் தனது கருத்தையும் யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக கூறுவார். தற்போது அவர் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார்.
காதல் வாழ்க்கை: அதுமட்டுமின்றி பல நடிகைகளை காதலித்ததாக கூறப்படும் கமல் ஹாசன், சரிகா, வாணி கணபதி என இருவரை திருமணம் செய்துகொண்டார். கௌதமியுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து பிறகு பிரிந்தார். அவரது இந்த வாழ்க்கை பலரிடம் விமர்சனத்தை பெற்றாலும் அதை பற்றி கண்டுகொள்ளாதவர் கமல் ஹாசன். இதற்கிடையே நடிகை ஸ்ரீவித்யாவையும் காதலித்தார் கமல். ஆனால் அவர்களின் காதல் திருமணம்வரை செல்லவில்லை.
ஸ்ரீவித்யா பேட்டி: இந்நிலையில் நடிகை ஸ்ரீவித்யா அளித்திருக்கும் பழைய பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "கமல் ஹாசனும் நானும் காதலித்தோம் என்று மொத்த திரையுலகுக்கும் தெரியும். எங்கள் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியும். நானும், கமல் ஹாசனும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என குடும்பத்தார்கள் விரும்பினார்கள். ஆனால் ஒரு முறை என்னையும், கமல் ஹாசனையும் என் அம்மா அழைத்தார்.
அறிவுரை: என் அம்மா கமலிடம், 'கமல் நீ திரையுலகில் பெரிய ஆளாகப்போகிறாய். நான் பிராக்டிக்கலாக யோசித்து சொல்கிறேன். அவளும் பெரிய நடிகையாக போகிறாள். அந்தத் திறமை அவளுக்கு இருக்கிறது என சொன்னார். இதனை கேட்ட கமல் ஹாசன் கோப்படவும் செய்தார். இதையடுத்து அவர் என்னிடம் பல காலம் பேசவே இல்லை. பிறகு கமல் ஹாசன் பெரிய ஹீரோவாகிவிட்டார். மேலும் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் என கேள்விப்பட்டேன். அதை கேட்டு எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவரை நான் நிரந்தரமாக இழந்துவிட்டேன்" என்றார்.
முன்னதாக ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடைசி காலத்தில் யாரையும் சந்திக்க விரும்பாமால் தனிமையில் இருந்த ஸ்ரீவித்யா கமல் ஹாசனை மட்டும்தான் சந்திப்பதற்கு திரும்பினார். கமலும் அதை கேள்விப்பட்டு கேரளாவுக்கு சென்று ஸ்ரீவித்யாவை சந்தித்துவிட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











