தாக்கப்பட்ட பிக்பாஸ் பூர்ணிமா.. குவிந்த ட்ரோல் கமெண்ட்ஸ்.. உடனடியாக நீக்கப்பட்ட வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர் பூர்ணிமா. அவரது செயல்பாடுகள் அந்த வீட்டுக்குள் விமர்சனத்தை சந்தித்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது மனது சொல்லியபடி விளையாண்டார். அடிப்படையில் சினிமா மீது ஆர்வம் உடைய அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் சில கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரை பச்சோந்தி ஒன்று தாக்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டானதை அடுத்து அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதுவரை ஏழு சீசன்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. நடந்து முடிந்த ஏழாவது சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அந்த சீசன் முழுவதும் டாக் ஆஃப் தி ஹவுஸாக இருந்தவர்களில் ஒருவர்தான் பூர்ணிமா. மாயாவுடன் சேர்ந்துகொண்டு அவர் செய்த அலப்பறைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் கிட்டத்தட்ட 80லிருந்து 90 நாட்கள்வரை வீட்டுக்குள் இருந்தார்.

A video of a chameleon attacking Bigg Boss Poornima drew troll comments

அராத்தி பூர்ணிமா: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே பூர்ணிமா யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார். அவர் அராத்தி என்ற பெயரில் யூட்யூப் சேனலை நடத்துகிறார். என்னதான் யூட்யூப் சேனல் மூலம் அவருக்கு பிரபல்யம் கிடைத்தாலும் பிக்பாஸ் பிளாட்பார்ம் தனது வாழ்க்கையை மாற்றும் என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் நுழைந்தார். அவர் நினைத்தபடியே மேற்கொண்டு பிரபல்யம் பிக்பாஸ் மூலம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்னபூரணி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னதாக ஹாட் ஸ்டாரில் வெளியான ஹே சண்டைக்காரி வெப் சீரிஸில் நடித்திருந்த அவர்; நயன் தாராவின் 75ஆவது படமான அன்னபூரணியிலும் கமிட்டானார். அவர் வீட்டுக்குள் இருந்தபோதே அன்னபூரணியில் பூர்ணிமா இருக்கும் போஸ்டர் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக பிக்பாஸ் முடிந்ததும் மேலும் சில பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

செவப்பி: எதிர்பார்த்தபடியே செவப்பி என்ற படத்திலும் நடித்தார். ஆஹா ஓடிடி தளத்தில் சில மாதங்களுக்கு முன்பு அந்தப் படம் வெளியானது. படத்துக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் பூர்ணிமாவின் கெட்டப்புக்கும், நடிப்புக்கு அப்ளாஸ்கள் கிடைத்தன. செவப்பி படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருப்பதால் மேற்கொண்டு சில பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

பூர்ணிமா மீது தாக்குதல்: இந்தச் சூழலில் அவர் சமீபத்தில் உயிரியல் பூங்கா ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது பச்சோந்தி ஒன்றை பூர்ணிமாவின் தோளில் ஊழியர் ஒருவர் வைக்க; விளையாட்டுத்தனமாக அந்த பச்சோந்தியை கையில் பிடித்தார். உடனடியாக அந்தப் பச்சோந்தி பூர்ணிமா மீது தாக்குதலை தொடுத்தது. இதனால் பூர்ணிமா அலறிவிட்டார். மேலும் பச்சோந்தியை தூக்கிடுங்க ப்ளீஸ் என்று கூறவும் செய்தார்.

நீக்கப்பட்ட வீடியோ: உடனே அந்தப் பச்சோந்தியை உயிரியல் பூங்கா ஊழிய பூர்ணிமாவின் தோளிலிருந்து எடுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோவை பூர்ணிமா சமூக வலைதள பக்கத்தில் பகிருந்திருந்தார். இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ் ஒரு பச்சோந்திக்கே பூர்ணிமாவை தாக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறதே என்று ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்ஸ்களை பறக்கவிட்டனர். இதனால் அப்செட்டான அவர் அந்த வீடியோவையும் நீக்கிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X