Prabhas - பிரபாஸை அறைந்த ரசிகை.. அப்படி என்ன செய்துவிட்டார் தெரியுமா?.. ட்ரெண்டாகும் வீடியோ

ஹைதராபாத்: Prabhas (பிரபாஸ்) பொது இடத்தில் வைத்து பிரபாஸை ரசிகை ஒருவர் கன்னத்தில் அடித்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

A video of a fan slapping Prabhas on the cheek in a public place has gone viral

மொக்கை வாங்கிய ஆதி புருஷ்: ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக ரிசல்ட் இருந்தது. ஆதிபுருஷை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். இதனால் படம் மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி மாஸ் ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகி மீண்டும் இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்த்திருக்கிறார் பிரபாஸ். சலார் படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

புராஜெக்ட் கே: இதற்கிடையே நாக் அஸ்வின் இயக்கத்தில் 600 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இதில் பிரபாஸ் மட்டுமின்றி கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு முதலில் புராஜெக்ட் கே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. கமல் ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

கல்கி 2898 ஏடி: புராஜெக்ட் கே என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழலில் அமெரிக்காவின் சான் டியாகோவில் நடந்த காமிக் கான் நிகழ்ச்சியில் படத்தின் பெயர் கல்கி 2898 ஏடி என அறிவிக்கப்பட்டு க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. முதலில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது கடுமையாக ட்ரோல் செய்த ரசிகர்கள் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

கன்னத்தில் அடித்த ரசிகை: இந்நிலையில் பொது இடம் ஒன்றில் பிரபாஸை பார்த்தார் ரசிகை ஒருவர். அப்போது அவரிடம் சென்ற ரசிகை தனக்கு உங்களுடன் செல்ஃபி எடுக்க ஆசை என்று கூறியவுடன் அதற்கு பிரபாஸும் சம்மதித்தார். செல்ஃபி எடுத்த அந்த ரசிகை கூடுதல் உற்சாகமடைந்து துள்ளி குதித்து பிரபாஸின் கன்னத்தில் செல்லமாக சின்னதாக ஒரு அடி அடித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X