Rajinikanth - பாபா தோல்வியை ரஜினி கையாண்ட விதம் சூப்பர்.. ட்ரெண்டாகும் அக்‌ஷய் குமாரின் பேச்சு

சென்னை: Rajini (ரஜினி) ரஜினிகாந்த் குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பலர் நடித்திருந்த அந்தப் படம் வெற்றிக்கான ரஜினியின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் படம் மெகா ஹிட்டடித்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை படம் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

A video of actor Akshay Kumar talking about Rajinikanth has trended on the internet.

தலைவர் 170: ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு த.செ.ஞானவேலு இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் டைட்டில் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவும் கமிட்டாகியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அடுத்த மார்ச் அல்லது ஏப்ரலில் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. கமலுக்கு எப்படி விக்ரம் என்ற மெகா ஹிட் படத்தை லோகேஷ் கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஜெயிலர் கொடுத்த வெற்றியை ரஜினி இனி வரும் படங்களிலும் தக்க வைத்துக்கொள்வார் என்றும் வசூலில் மாஸ் காண்பிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

பாபா பட தோல்வி: இப்படி ரஜினி மீது பெரிய நம்பிக்கையை வைத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு எப்போதும் ஆறாத வடு என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். ஏனெனில் அந்தப் படத்தை ரஜினி ரொம்பவே எதிர்பார்த்தர். கதையையும் எழுதினார். ஆனால் படம் கடந்த ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. விநியோகஸ்தர்களுக்கு பணட்த்தையும் திருப்பி கொடுத்தார். அந்தத் தோல்வி ரஜினிக்கு முடிவுரை எழுதிவிட்டதாகவே பலரும் சொன்னார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாத அவர் சந்திரமுகி மூலம் கம்பேக் கொடுத்தார்.

அக்‌ஷய் குமார் பேச்சு: இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். சூழல் இப்படி அக்‌ஷய் குமார் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசியிருந்ததில், "ரஜினியை நான் சிறிய வயதிலிருந்தே ரசித்து வருகிறேன். பாபா படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ஆனால் அந்தப் படத்தால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தை திருப்பி கொடுத்தார். அந்த தோல்வியை அவர் கையாண்டிருந்த விதம் என்னை ரொம்பவே கவர்ந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X