Vishal - எம்மதமும் சம்மதம்.. ஆயுதபூஜையில் விஷால் செய்த செம செயல்
சென்னை: Vishal (விஷால்) நடிகர் விஷால் ஆயுதபூஜையின் போது மும்மத கடவுள்களை கும்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்
செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்

எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர். படம் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் தனது 34ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

எம்மதமும் சம்மதம்: இந்நிலையில் விஷால் 34 படக்குழு ஆயுத பூஜையை கொண்டாடியது. அப்போது நடிகர் விஷல் கடவுளை கும்பிடும்போது இந்து, முஸ்லீம் கிறிஸ்தவம் ஆகிய மதங்களை சேர்ந்த கடவுள்களை கும்பிட்டார். இதேபோல் சில வாரங்களுக்கு முன்னதாக மார்க் ஆண்டனி படம் தொடர்பான விழாவில் சாப்பிடுவதற்கு முன்பு இதேபோல் மும்மத கடவுள்களை விஷால் கும்பிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











