Yogibabu - கோயிலில் தீண்டாமை?.. யோகிபாபுவுக்கும் இந்த நிலைமையா?.. என்ன இப்படியெல்லாம் நடக்குது

சென்னை: YogiBabu (யோகிபாபு) முருகன் கோயில் ஒன்றில் நடிகர் யோகிபாபு அவமானப்படுத்தப்பட்ட வகையில் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் யோகிபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் கையில் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இதனால் படு பிஸியாக நடித்துவருகிறார் யோகிபாபு. டாப் ஹீரோக்கள் அத்தனை பேருடனும் இணைந்து நடித்து அனைவராலும் அறியப்பட்டவர். முதலில் யாமிருக்க பயமேன் படத்தின் மூலம்தான் அடையாளப்பட்டார்.

 A video of actor Yogi Babu being humiliated in a Murugan temple

ஹீரோ யோகிபாபு: நகைச்சுவை நடிகராக வலம் வந்த யோகிபாபு நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக இயக்கிய கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஹீரோவாக நடித்த யோகிபாபுவுக்கு கோலமாவு கோகிலா படமானது வரவேற்பைப் பெற்றது. இதனால் ஹீரோவாகவே தொடரலாம் என்பதை அவர் செய்தார். அதேசமயம் நகைச்சுவை காட்சிகளில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மண்டேலா : ஹீரோவாக முதல் பட வெற்றிக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதாநாயகனாக நடித்தார் யோகிபாபு. வித்தியாசமான கதைக்களத்தைக்கொண்ட மண்டேலாவும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக படமான தேசிய விருதையும் வென்றது. இதனால் யோகிபாபு உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். மேலும் அவருக்கு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும் ரசிகர்களுக்கு மண்டேலா உணர்த்தியது.

 A video of actor Yogi Babu being humiliated in a Murugan temple

மாவீரன், ஜெயிலர்: யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் மாவீரன் படம் வெளியானது. படமும் மெகா ஹிட்டாகியிருக்கிறது. அதேபோல் ரொம்ப நாட்களுக்கு பிறகு யோகிபாபுவின் காமெடி ரொம்பவே ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கூறினர். மாவீரன் மட்டுமின்றி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திலும் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் பத்தாம் தேதி படம் ரிலீஸ். அதுமட்டுமின்றி ஹாருக்கானுடன் ஹிந்தியில் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகிறது.

 A video of actor Yogi Babu being humiliated in a Murugan temple

முருக பக்தர்: யோகிபாபு தீவிரமான முருக பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருச்செந்தூர், பழனி என தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை முருகன் கோயிலுக்கும் செல்வதை அவர் வழக்கமாகவே வைத்திருக்கிறார். அப்படி அவர் சிறுவாபுரியில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதனையடுத்து அங்கிருந்த அரச்சகர் ஒருவரிடம் கை கொடுத்தான் யோகிபாபு. ஆனால் அந்த அர்ச்சகரோ யோகிபாபுவுக்கு கை கொடுக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் யோகிபாபு தீண்டாமை கொடுமையை அனுபவித்துவிட்டாரா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X