Keerthy Suresh - ஜெயிலர் வைப்.. நைட் க்ளப்பில் செம ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Keerthu Suresh (கீர்த்தி சுரேஷ்) க்ளப் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் எங்கே என் புன்னகை பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினிஉடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.

A video of actress Keerthy Suresh dancing in a club has trended on the internet

சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.

தேசிய விருது: அதன்படி நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

A video of actress Keerthy Suresh dancing in a club has trended on the internet

மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவர் சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியானது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு ரகுதாத்தா என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. மாமன்னன் கொடுத்த உற்சாகத்தால் தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற நினைப்பில் இருக்கிறார் கீர்த்தி.

செம ஆட்டம்: இந்நிலையில் நைட் க்ளப் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் தனது தோழிகளுடன் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹிந்தி பாடல் ஒன்றை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தில் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடல் தமிழில் எங்கே என் புன்னகை என்று தொடங்கும். ஜெயிலர் படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றதை அடுத்து மேற்கொண்டு அது ஃபேமஸானது. அந்தப் பாடலுக்குத்தான் கீர்த்தி சுரேஷ் பக்காவாக நடனம் ஆடியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X