Malaika Arora - காதலர் பிறந்தநாள்.. போதையில் கெட்ட ஆட்டம் போட்ட நடிகை

மும்பை: Malaika Arora (மலைகா அரோரா) அர்ஜுன் கபூர் பிறந்தநாளில் மது போதையில் நடிகை மலைகா அரோரா ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய படம் தில் சே. தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஷாருக்கான், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்தப் படம் எந்த அளவு வரவேற்பைப் பெற்றதோ அதே அளவு வரவேற்பை பெற்றது படத்தில் இடம்பெற்ற தைய தையா பாடல். அந்தப் பாடலில் நடனமாடியவர் மலைக்கா அரோரா.

A video of actress Malaika Arora dancing under the influence of alcohol on Arjun Kapoors birthday is trending

மலைகாவின் திருமணம்: அதனைத் தொடர்ந்து பல பாடல்களுக்கு நடனமாடியும், படங்களிலும் நடித்த அவர் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் என்பவரை 1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கை 2017ஆம் ஆண்டு விவகாரத்தில் முடிந்தது.

மலைகாவின் காதல்: அர்பாஸ் கானை பிரிந்த பிறகு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூருடைய முதல் மனைவி மகனான நடிகர் அர்ஜுன் கபூருடன் காதலித்தார் மலைகா அரோரா. அர்ஜுன் கபூரைவிட மலைகா அரோரா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 12 வயது இளையவருடன் காதலா என பலர் விமர்சித்தனர். ஆனால் காதலுக்கு வயது முக்கியமில்லை மனதுதான் முக்கியம் என்பதன் அடிப்படையில் இருவரும் லிவிங் டூ கெதராக வாழ்ந்துவருகின்றனர்.

அர்ஜுன் கபூர்: இந்தச் சூழலில் அர்ஜுன் கபூரின் 38ஆவது பிறந்தநாள் கடந்த 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரமாண்ட பார்ட்டியும் நடந்தது. இதில் மலைகா அரோரா மற்றும் அர்ஜுன் கபூரின் நண்பர்கள் கலந்துகொண்டனர். அந்த பார்ட்டியின்போது முழு மது போதையில் மலைகா அரோரா ஜாலியாக நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

நிர்வாண புகைப்படம்: இதற்கிடையே அர்ஜுன் கபூர் நிர்வாணமாக சோபாவில் அமர்ந்திருந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அந்தரங்கமாக இருக்கும் புகைப்படத்தை மலைகா எப்படி பொதுவெளியில் பகிரலாம் எனவும் ரசிகர்களில் பலர் கேள்வி எழுப்பிவந்தனர். ஆனால் அதற்கு இரண்டு பேரும் எந்தவித ரியாக்ட்டும் செய்யவில்லை.

கர்ப்பம்: அதுமட்டுமின்றி மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாகவும், சமீபத்தில் அர்ஜுன் கபூரும், மலைக்காவும் லண்டன் சென்றபோது தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதுகுறித்து இருவரும் பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை அர்ஜுன் கடுமையாக மறுத்தார். மேலும், " எதிர்மறையான விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் பரவுகின்றன என நினைக்கிறேன்.

எதிர்மறையான விஷயங்களை எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் பரவுகின்றன என நினைக்கிறேன்.எங்களைப் பற்றி முக்கியமான விஷங்களை எழுதும்போது எங்களிடம் கேளுங்கள். நீங்களாக யூகித்து எழுதக்கூடாது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X