Don't Miss!
- News
ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ் சுட்டுக்கொலை.. உதவி எஸ்ஐ வெறிச்செயல்! யார் இவர்? மனைவி பகீர் தகவல்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Sports
ஆட்டத்தையே மாற்றிய கேட்ச்.. வெற்றியால் கதறி அழுத கேப்டன்..U-19 இந்திய மகளிர் அணிக்கு எவ்வளவு பரிசு?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வாரிசு செகண்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த விஜய்… இறங்கி வந்து சிக்சர் அடித்த அஜித்
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆக்சன் ஜானரில் ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
விஜய்யின் வாரிசு செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் நேற்று வெளியான நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதற்கு டஃப் கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதிக
டிக்கெட்
விலை..
அஜித்
படத்துக்கு
அதிரடியாக
விதிக்கப்பட்ட
அபராதம்..
என்ன
இப்படி
ஆகிடுச்சே!

வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்
அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித், தற்போது துணிவு படத்தில் நடித்துள்ளார். ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த முறை பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவுடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் களமிறங்குவதால், இருதரப்பு ரசிகர்களும் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த பொங்கல் ரேஸில் விஜய்யா அஜித்தா என்பதே மிக முக்கியமான பேசுபொருளாக உள்ளது.

வாரிசு செகண்ட் சிங்கிள் அப்டேட்
அஜித்தின் துணிவு படத்தில் இருந்து இதுவரை போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்திற்காக அஜித் உட்பட மற்ற நடிகர்கள் டப்பிங் கொடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இதனிடையே, விரைவில் துணிவு படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதேநேரம் விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ஏற்கனவே 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இதனைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துவிட்டது.

இறங்கி அடித்த அஜித்
அதன்படி, வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிளான 'தீ' என்ற பாடல், நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது. இந்தப் பாடல் விஜய்யின் தீம் மியூசிக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தில் இருந்து இன்னும் முதல் பாடலே வெளியாகாத நிலையில், வாரிசு செகண்ட் சிங்கிள் வரவிருப்பதால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அஜித் ரசிகர்கள் ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், அஜித் கிரிக்கெட் விளையாடும் வீடியோ தான் அது.

ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, படப்பிடிப்புத் தளத்தில் அஜித் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் ஸ்டைலிஷாக கிரிக்கெட் விளையாடும் வீடியோவை, அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். வாரிசு செகண்ட் சிங்கிள் அப்டேட்டுக்குப் போட்டியாக அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் வெயிட்டிங்
சில மாதங்களாக ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகி வரும் நிலையில், இப்போது அவரின் கிரிக்கெட் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விரைவில் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அப்டேட்டுக்கே அப்டேட் கேக்கும் நிலையில் தான் அஜித் ரசிகர்கள் இருப்பதாக, விஜய் ஃபேன்ஸும் கிண்டல் செய்து வருகின்றனர்.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
குலதெய்வத்தை வேண்டி உன் காதை அறுத்தாலும் அது நடக்காது... நெட்டிசனுக்கு சவால் விட்ட மோகன் ஜி
-
ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!