Allu Arjun - சிறந்த நடிகருக்கான தேசிய விருது.. ஆனந்த கண்ணீரில் அல்லு அர்ஜுன்.. ட்ரெண்டாகும் வீடியோ

ஹைதராபாத்: Allu Arjun (அல்லு அர்ஜுன்) சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததை அடுத்து அல்லு அர்ஜுன் ஆனந்த கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 283 படங்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டதாக விருதுகளை அறிவிப்பதற்கு முன்பு ஜூரிக்கள் தெரிவித்தனர். தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், விநோதய சித்தம், சார்பட்டா பரம்பரை, மாநாடு, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றிருந்தன.

A video of Allu Arjun Happy tears after winning the National Award for Best Actor

கடைசி விவசாயி: இவற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய் பீம் படத்துக்கு விருது கிடைக்கவில்லை. அதேசமயம் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு படத்துக்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அதேசமயம் ஸ்பெஷல் மென்ஷன் பிரிவில் கடைசி விவசாயி படத்துக்கும் அதில் நடித்திருந்த நல்லாண்டிக்கும் தேசிய விருது கிடைத்திருக்கிறது. மற்றபடி தமிழுக்கு வேறு எந்த விருதும் கிடைக்கவில்லை.

ஆர்ஆர்ஆர்: தெலுங்கிலிருந்து ஆர்ஆர்ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் நாமினேஷனில் இருந்தன. இவற்றில் ஆர் ஆர் ஆர் படம் மோஸ்ட் பாப்புலர் கேட்டகிரியில் தேசிய விருதை வென்றது. அதேபோல் சிறந்த நடன அமைப்பாளர், சிறந்த சண்டை காட்சி, சிறந்த பின்னணி இசையமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகர் ஆகிய பிரிவுகளிலும் அந்தப் படமானது தேசிய விருதை வென்றது.

சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன்: புஷ்பா படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை தேவிஸ்ரீ பிரசாத் பெற்றார். முக்கியமாக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றார். விருதுகள் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதிலிருந்தே அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நிச்சயம் அல்லுவுக்கு தேசிய விருது கிடைக்கும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டுவந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தியாகும்படி அவருக்கு விருது கிடைத்திருக்கிறது.

A video of Allu Arjun Happy tears after winning the National Award for Best Actor

ஆனந்த கண்ணீர்: இந்நிலையில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வை அல்லு அர்ஜுன் தனது குடும்பத்தின் மற்றும் புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் உள்ளிட்டோருடன் பார்த்துக்கொண்டிருதார். சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன் என்று சொல்லப்பட்டவுடன் அவர் ஆனந்த கண்ணீர் விட்டார். மேலும் அவரை கட்டி அணைத்து சுகுமார் பாராட்டு தெரிவித்தார்ர். அந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தொடர்ந்து தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X