Dhivyadharshini - அவரை திருமணம் செய்ய வேண்டும்.. ஹன்சிகா நினைத்தால் நடக்கும்.. திவ்யதர்ஷினி ஓபன் டாக்

சென்னை: Dhivyadharshini (திவ்யதர்ஷினி) ஒரு நடிகரை திருமணம் செய்ய நான் ரெடி என்றும் அவருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்றும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லமை படைத்தவர். குறிப்பாக நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் டிடி பேசுவதை பார்க்கும்போது அவர்களுடன் ரொம்பவே நெருக்கமான உணர்வை ஏற்படுத்தி அவர்களை கம்ஃபர்டபிளாக வைத்துக்கொள்வார். இதனாலேயே அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்.

A video of Anchor Dhivyadharshini asking her to date with Hrithik Roshan and asking Hansika to help

காஃபி வித் டிடி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ரொம்பவே ஃபேமஸான ஒன்று காஃபி வித் டிடி. இந்த நிகழ்ச்சியானது முதலில் காஃபி வித் அனு என்ற பெயரில் நடந்தது. அதனை நடிகையும், கமல் ஹாசனின் உறவினருமான அனுஹாசன் தொகுத்து வழங்கினார். அதனையடுத்து அந்த நிகழ்ச்சி டிடியின் கைகளுக்கு சென்றது. டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதிலிருந்து அதற்கான மவுசு அதிகரித்தது. ஏற்கனவே சொன்னதுபோல் அந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களிடம் ரகளையாகவும், ஜாலியாகவும் பேசி போர் அடிக்காமல் கொண்டு செல்வார்.

திரைப்படங்களில் டிடி: திவ்யதர்ஷினி சின்னத்திரையில் மட்டுமின்றி பெரிய திரையிலும் தோன்றக்கூடியவர். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி மற்றும் இன்னும் சில படங்களில் தன்னுடைய சிறு வயதில் தோன்றினார் அவர். கடைசியாக சுந்தர் சி இயக்கிய காஃபி வித் காதல் படத்தில் நடித்தவர் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். படம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேட்டிங் செல்ல ஆசை: டிடி சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருக்கக்கூடியவர். இந்தச் சூழலில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்த வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில் ஒரு ரசிகர், 'உங்களுடைய பாலிவுட் க்ரஷ் யார்?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர் இப்போது மட்டும் இல்லை பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே எனக்கு க்ரஷ் என்றால் கிருத்திக் ரோஷன் மட்டுமே' என்றார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் அவரை திருமணம் செய்துகொள்வீர்களா என கேட்டதற்கு, 'எனக்கு ஓகேதான். ஆனால் கிருத்திக் ரோஷனுக்கு ஓகேயா என்று தெரியவில்லையே. ஹன்சிகா மோத்வானிக்கு கிருத்திக்கை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். ஹாய் ஹன்சிகா கிருத்திக் ரோஷனடுனான டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள். எனக்கு அந்த உதவியை செய்யுங்களேன்' என கேட்டிருக்கிறார்.

A video of Anchor Dhivyadharshini asking her to date with Hrithik Roshan and asking Hansika to help

திருமண முறிவு: திவ்யதர்ஷினி சில வருடங்களுக்கு முன்பு தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை அடுத்த சில வருடங்களிலேயே பிரச்னையை சந்தித்தது. இதன் காரணமாக இரண்டு பேரும் பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர். அதனையடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்துவருகிறார் திவ்யதர்ஷினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X