Vijay - மாநிலத்தை ஆளும் தகுதி இருக்கா?.. அரவிந்த் சாமி நெத்தியடி பேச்சு.. விஜய்யை இழுத்துவிடும் ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அரவிந்த் சாமி பேசிய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த சிலர் இந்த விவகாரத்துக்குள் விஜய்யையும் இழுத்துவிட்டிருக்கின்றனர்.

விஜய் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைகிறது. இதற்கிடையே அவர் தனது மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார். கடந்த டிசம்பர் மாதம்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நேராக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் முழு நேர அரசியல்வாதியாக மாறும் காலம் தொலைவில் இல்லை என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.

A video of Aravind Samy talking about actors entering politics has trended on the internet

தமிழக வெற்றி கழகம்: இந்தச் சூழலில் நேற்று அவர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். அக்கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் வேலைகளும் ஜோராக தொடங்கிவிட்டன. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை; எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை; 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்று முழங்கியிருக்கிறார். இதனால் விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது அவரது தொண்டர்களாக மாறியிருக்கிறார்கள்.

வெல்வாரா விஜய்?: விஜய் நேற்று அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து இனி தமிழ்நாட்டின் அரசியல் போக்கு எப்படியாக இருக்கும் என்று விவாதங்கள் எழ ஆரம்பித்துவிட்டன. மேலும் தேர்தலில் அவர் தனித்து போட்டியிடுவாரா இல்லை கூட்டணி அமைப்பாரா என்ற கேள்வியை இப்போதே எழுப்பும் சிலர் விஜயகாந்த் கட்சி மாதிரி ஆரம்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து பிறகு சுவடில்லாமல் தமிழக வெற்றி கழகம் போய்விடுமோ என்றும் சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

அரவிந்த் சாமி பேச்சு: இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அரவிந்த் சாமி பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், "ரஜினி ரசிகர், கமல் ரசிகர், விஜய் ரசிகர் என்ற காரணத்துக்காக வாக்களிக்கக்கூடாது. நான் அப்படி வாக்களிக்கவும் மாட்டேன். நடிகர்கள் சொல்லக்கூடிய விஷயங்களால் சமூகத்தில் மாற்றங்கள் வருமா?.. அவர்களால் அந்த மாற்றத்தை செய்ய முடியுமா. அவர்களின் கருத்து மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

தகுதி இருக்கா பாஸ்: பெரிய நடிகர்தான். இல்லை என்று சொல்லவிலலி. ஆனாலும் அரசு திட்டங்களை தீட்டும் அளவுக்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை எப்படி நம்புவது. அரைச்யலில் களமிறங்கும் நடிகர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆளும் அளவுக்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா? ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய அளவுக்கு அவர்கள் உயர்ந்திருக்கிறார்களா. பண்ண முடியாது என்பது அல்ல. பண்ண முடியும். ஆனால் ஒரு தலைவராக அவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டுமே" என்றார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமி சொல்வது நல்ல பாயிண்ட்தான். விஜய் சாதாரணமான திட்டத்தோடு அரசியலுக்கு வந்திருக்கமாட்டார். கண்டிப்பாக அவர் பெரும் மாற்றத்தை நிகழ்த்துவார் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம் இன்னொரு தரப்பினரோ, அரவிந்த் சாமி சொல்வதுதான் எதார்த்தம். விஜய்க்கு அந்த அளவுக்கு தகுதி இல்லை என்று பற்ற வைத்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X