மேடையில் பாடிய அனிருத்.. பொருட்களை வீசிய ரசிகர்கள்.. என்ன நடந்தது தெரியுமா?.. பரபர வீடியோ
சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், தேவரா, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவரது ஹோட்டல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அனுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.
ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தை பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், இந்தியன் 2, விடாமுயற்சி, தெலுங்கில் தேவரா உள்ளிட்ட படங்கள் அவரது இசையமைப்பில் வெளியாகவிருக்கின்றன.

கான்செர்ட்: ஒருபக்கம் சினிமாவில் இசையமைப்பதில் பிஸியாக இருக்கும் அனிருத் மறுபக்கம் நாடு நாடாக சென்று மியூசிக் கான்செர்ட் நடத்துவதிலும் பிஸியாக இருக்கிறார். அந்தவகையில் அனிருத் கான்செர்ட் நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் மேடையில் நின்றபடி அனிருத் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார். அப்போது கீழே இருந்து சில ரசிகர்கள் பொருட்களை தூக்கி மேடை மீது போடுகிறார்கள்.
ஆனால் அதை கண்டு பதற்றமடையாத அனிருத்; தன்னை நோக்கி வந்த பொருட்களை பிடிப்பதிலும், கீழே விழுந்த பொருட்களை அப்புறப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார். இந்த வீடியோதான் இப்போது அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மேலும் அப்படிப்பட்ட சூழ்நிலையை கூலாக ஹேண்டில் செய்த அனிக்கு பாராட்டையும் தெரிவித்துவருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











