ஐஸ்வர்யா ராயின் கணவருக்கு நச்சுனு பல கிஸ்.. பெண் பிரபலம் செய்த சேட்டை.. கொண்டாட்டத்தில் திண்டாட்டம்?

மும்பை: ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேருக்கும் விவாகரத்து நடைபெறப்போகிறது என்று கடந்த வருடத்தில் தகவல்கள் பரவிக்கொண்டே இருந்தன. ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை என்பதை இரண்டு பேருமே தெளிவுப்படுத்திவிட்டார்கள். இந்தச் சூழலில் அபிஷேக் பச்சன் கடந்த ஐந்தாம் தேதி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

உலக அழகி என்று சொன்னாலே இந்தியர்கள் மனதில் ஐஸ்வர்யா ராய்தான் தோன்றுவார். அந்தப் பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் ஐஸ்வர்யா ராய்க்கும் நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஹிந்தியில் அவரது கவனம் திரும்பியது. அங்கு அவருக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் கிடைத்தது.

aishwarya rai abishek bachchan

சல்மான் கானுடன் காதல்: ஹிந்தியில் தொடர்ந்து பிஸியாக நடித்துவந்த அவர் அவ்வப்போது தமிழிலும் நடித்தார். அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டடித்தன. இதற்கிடையே அவர் சல்மான் கானை தீவிரமாக காதலித்துவந்தார். ஆனால் அந்தக் காதலில் சில டாக்சிக் விஷயங்கள் நடந்ததன் காரணமாக இரண்டு பேரின் காதலும் பாதியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக்குடன் திருமணம்: சல்மான் கானை தொடர்ந்து விவேக் ஓபராயை சில காலம் காதலித்த ஐஸ்வர்யா அந்தக் காதலையும் பிரேக் அப் செய்தார். அதற்கு பிறகு அமிதாப் பச்சன் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததைத் தொடர்ந்து பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

விவாகரத்து இல்லை: ஆனால் கடந்த வருடத்தில் ஒரு தகவல் பரவியது. அதாவது அபிஷேக்கிற்கும், ஐஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. எனவே அவர்கள் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. இந்தத் தகவல்களில் துளியும் உண்மையில்லை என்று இரண்டு பேரும் தெளிவுப்படுத்திவிட்டார்கள். மேலும் சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

அபிஷேக் பிறந்தநாள்: இந்நிலையில் அபிஷேக் பச்சன் நேற்று முன்தினம் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அபிஷேக் பச்சனின் சிறு வயது ஃபோட்டோக்களை பகிர்ந்து ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவருக்கு வாழ்த்தினை தெரிவித்தார். அது சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டானது. சூழல் இப்படி இருக்க அபிஷேக் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட இன்னொரு வீடியோவும் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன வீடியோ?: அதாவது அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குநரும், நடன அமைப்பாளருமான ஃபரா கான் கலந்துகொண்டார். அப்போது அபிஷேக் பச்சனை கட்டியணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தங்களை கொடுத்தார். இதனால் அபிஷேக் பச்சன் திண்டாடிப்போனார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஃபரா கான், 'நான் செய்வது பிடிக்காத மாதிரியே அபிஷேக் பச்சன் இருப்பார். ஆனால் அது அவருக்கு பிடிக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X