Kajal Aggarwal - காபி கப் உள்ளே விழுந்த காஜல் அகர்வால்.. தூக்கி வாரிப்போட்ட வீடியோ

சென்னை: Kajal Aggarwal (காஜல் அகர்வால்) காபி கப்புக்குள் விழுவது போன்று காஜல் அகர்வால் பகிர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

காஜல் அகர்வால் தமிழில் பழனி படம் மூலம் அறிமுகம் ஆனார். அதனையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்தார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகாவிட்டாலும் காஜல் அகர்வாலை தமிழ் சினிமா வரவேற்க தயாரானது. தொடர்ந்து தமிழில் மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மஹதீரா: தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார். ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.

A video of Kajal Aggarwal falling into a cup of coffee is trending on social media

முன்னணி ஹீரோக்கள்: தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.

திருமணம்: இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்தார்.

இந்தியன் 2: அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனது 60ஆவது படம் குறித்த அறிவிப்பையும் சமீபத்தில்தான் காஜல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அதனை காஜல் அகர்வால் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.

காபி கப்பில் காஜல்: இந்நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 'காலையில் எனது காபியை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்ற கேப்ஷனோடு தொடங்கும் அந்த வீடியோவில், முதலில் காபி கப் அருகில் இருக்கும் அவர் பிறகு சிறிது தூரம் சென்றுவிட்டு காபி கப்புக்குள் குதிப்பது போல் எடிட் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து காஜலுக்கு காபினா அவ்வளவு இஷ்டமா என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X