Keerthy Suresh - பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்?.. என்ட்ரி ஆனதும் செய்திருக்கும் வேலை.. ட்ரெண்டாகும் வீடியோ
மும்பை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும் ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, சர்கார் விக்ரமுடன் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மகாநடிகை: இப்படிப்பட்ட சூழலில் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மாமன்னன்: தமிழில் அவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நடிப்பில் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. எனவே தமிழில் அடுத்த ரவுண்ட் வர காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கிசுகிசு: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிசுகிசு தீயாக பரவியது. அதாவது விஜய்யும், கீர்த்தி சுரேஷும் காதலிக்கிறார்கள் என்றும்; கீர்த்தி சுரேஷை விஜய் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அதில் உண்மை துளியும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து விஜய் - கீர்த்தி சுரேஷ் குறித்த பேச்சு அடிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்துவருகிறார் கீர்த்தி.
பாலிவுட் என்ட்ரி?: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் விடி 18 என்ற படத்தை இயக்குநர் அட்லீ தயாரிப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. நேற்றைய ஷூட்டிங் முடிந்த பிறகு கீர்த்தி சுரேஷும் வருண் தவானும் ஆட்டோவில் சென்றனர்.
அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. கடந்த சில காலமாகவே அட்லீயுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். எனவே அட்லீ மூலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகிவிட்டாரோ கீர்த்தி சுரேஷ் என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர். இதற்கிடையே அந்தப் படம் தெறி படத்தின் ரீமேக் என்றும் கீர்த்தி சுரேஷ் அதில் கமிட்டாகிவிட்டார் என்றும் விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











