பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ்.. எங்க பார்ட்டி பண்ணிருக்காரு பாருங்க.. செம வீடியோ
சென்னை: கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராக இப்போது வலம் வந்துகொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவில்லை. அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ்தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அவர் இயக்கிய முதல் நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அவரது இயக்கத்தில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான லியோ விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலும் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. எனவே வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு லியொ திரைப்படம் முதல் சறுக்கலாகவே கருதப்படுகிறது.

தலைவர் 171: லியோ திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மார்ச் அல்லது ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பமாகும் என லோகேஷ் தெரிவித்திருக்கிறார். லியோ படத்தில் சந்தித்த விமர்சனங்களை கண்டிப்பாக தலைவர் 171ல் சரி செய்வார் என்று நம்பப்படுகிறது. ரஜினி படத்துக்கான பணிகளையும் தொடங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
எல்சியூ: லோகேஷ் கனகராஜின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரது மேக்கிங்கும் திரைக்கதையும். தான் திறமை வாய்ந்த கலைஞர் என்பதை தன்னுடைய முதல் படமான மாநகரத்திலேயே தன்னுடைய மேக்கிங் மூலம் நிரூபித்திருப்பார். அடுத்ததாக கமல் ஹாசனை வைத்து இயக்கியிருந்த விக்ரம் படத்தில் எல்சியூவை உருவாக்கி திரைக்கதையில் மேஜிக் நிகழ்த்தியிருப்பார்.
ஒர்க் அவுட் ஆகாத எல்சியூ: லோகேஷ் கனகராஜின் பலமாக பார்க்கப்பட்ட எல்சியூவே லியோவில் அவருக்கு சூட்டை கொடுத்திருக்கிறது. கைதி பட கான்ஸ்டபிள் நெப்போலியன் வந்ததோ இல்லை படத்தின் க்ளைமேக்ஸில் விக்ரம் கமல் ஹாசன் பேசுவது போன்ற காட்சியோ ரசிகர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக லியோ திரைப்படத்தை எல்சியூவுக்குள் கொண்டுவந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்தாரோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவருகின்றனர் ரசிகர்கள்.
பிறந்தநாள்: லியோ இப்படி சில விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. அதுமட்டுமின்றி ஆடியோ ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் என ரிலீஸுக்கு முன்னதாகவே லாபம் பார்த்ததாகவே கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் என்பதை மறுக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க அவர் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சன் பிக்சர்ஸ் வீடியோ: அதனையொட்டி பலரும் தங்களது வாழ்த்தை லோகேஷுக்கு தெரிவித்துவரும் நிலையில் அவர் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது, ஒரு க்ளப்பில் வெள்ளை சட்டை அணிந்தபடி பிறந்தநாள் கேக் வெட்டும் அவர் தனது நண்பர்கள், உதவி இயக்குநர்களுக்கு ஊட்டிவிடுகிறார். மேலும் பின்னணியில் விக்ரம் பட பாடல், லியோ பட பாடல் ஒலிக்கின்றன.
அதேபோல், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர் பற்றி விஜய், கமல் ஹாசன் உள்ளிட்டோர் புகழ்ந்து பேசும் வசனங்களும்; லோகேஷின் படங்களில் இடம்பெற்ற மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











