சீரியஸாக பேசும் விக்கி.. சிரித்தப்படி கிண்டலாய் கேட்கும் நயன்.. திடீரென பரவும் கடற்கரை வீடியோ!
சென்னை: நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடற்கரை ஓரத்தில் தனியாக நின்று பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் விஷயம் ஊர் அறிந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ஒரு தகவலும் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்ற ஒரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வெளிநாடுகளில்..
ஆனால் இதுகுறித்து காதல் ஜோடிகளான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஆனால் எந்த விசேஷம் என்றாலும் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கி வருகின்றனர். வெளி நாடுகளில் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

வித்தியாசமான வாழ்த்து
அண்மையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து கூறியிருந்தார். அதாவது, எதிர்காலத்தில் என் குழந்தைகளுக்கு தாயாக போகும் நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் என்று இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

விக்கி நயன் வீடியோ
அதனை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் செம குஷியாயினர். இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடற்கரை ஓரத்தில் தனியாக சிரித்து பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது லைட்ஹவுஸ் பக்கத்தில் நடைபெற்ற நானும் ரவுடிதான் படத்தின் ஷுட்டிங்கின் போது, படத்தின் கதாநாயகியான நயனுக்கு காட்சி குறித்து விளக்கி கூறுகிறார் விக்கி.

சிரிக்கும் நயன்
விக்கி சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் போது கூட அவரை கலாய்ப்பது போல சிரித்தப்படியே கேட்கிறார் நயன்தாரா. ஆனால் அப்போதும் சிரிக்காத விக்னேஷ் சிவன், சீரியஸாக சீன் குறித்து பேசி வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் திடீரென பரவி வருகிறது.

இந்தப் படத்தின் போதுதான்..
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன பேசுகிறீர்கள், ஆடியோ தெளிவாக இருக்கும் வீடியோக்களை ஷேர் செய்யுங்கள் அல்லது டப்பிங் கொடுங்கள் என கேட்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் போதுதான் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











