ஆதிபுருஷ் டீசரை கலாய்த்த ரசிகர்கள்… இயக்குநரை கோபமாக மிரட்டும் பிரபாஸ்… டிரெண்டாகும் வீடியோ…
ஐதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி அயோத்தியில் இருந்து வெளியிடப்பட்டது.
பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில் பிரபாஸின் கோபமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராமர் அவதாரம் எடுத்த பிரபாஸ்
ராதே ஷ்யாம் படத்தைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்', நாக்அஸ்வின் இயக்கும் 'ப்ராஜக்ட் கே' படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதனிடையே பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கியுள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடந்த 2ம் தேதி வெளியானது. இந்தப் படம் 2023 ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், அனிமேஷன் டெக்னாலஜியில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

கடுப்பான பிரபாஸ் ரசிகர்கள்
3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில், பிரபாஸ் ராமராகவும் கிருத்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். அதேபோல் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணன் கேரக்டரில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்வது ஒருபுறம் என்றால், இன்னொரு பக்கம் கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சைஃப் அலிகானை ராவணனாக நடிக்க வைத்ததற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஹனுமான் தோல் ஆடை அணிந்திருப்பதா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், ஆதிபுருஷ் படத்தை அதிகம் எதிர்பார்த்திருந்த பிரபாஸ் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. .

கோபமான பிரபாஸ்
பாகுபலி திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதன் பிறகு பிரபாஸை பான் இந்தியா ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் மிகப் பெரிய தோல்வியை தழுவின. இதனால், ஆதிபுருஷ் படத்தை ரொம்பவே எதிர்பார்த்து இருந்தார் பிரபாஸ். ஆனால், 3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசர், பொம்மை படம் போல உருவாகியுள்ளது. இதனை பார்த்த பிரபாஸ் இயக்குநர் ஓம் ராவத் மீது கடுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

வைரலாகும் வீடியோ
ஆதிபுருஷ் டீசரை நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வரும் நிலையில், பிரபாஸ் ரொம்பவே டென்ஷனாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹனுமான் தோல் ஆடை விவகாரம் வேறு சர்ச்சையாகியுள்ளதால், ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் போது பிரச்சினைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆதிபுருஷ் டீஸரை பார்த்துவிட்டு பிரபாஸ் கோபத்தில் இயக்குநர் ஓம் ராவத்தை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இயக்குநர் ஓம் ராவத்தை, பிரபாஸ் தன் அறைக்கு வருமாறு கோபமாக அழைக்கும். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது


Click it and Unblock the Notifications











