கல்யாணம் முடிஞ்ச கையோட அங்க போய்ட்டாரே.. பிரேம்ஜி என்ன செய்றாரு பாருங்க?.. எப்படி இருந்த மனுஷன்

சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளரான பிரேம்ஜி அமரன் சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோயிலில் எளிய முறையில் நடைபெற்றது.முரட்டு சிங்கிள் என்று சொல்லி சுற்றிக்கொண்டிருந்த பிரேம்ஜிக்கு திருமணமா என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். இந்தச் சூழலில் அவரது மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இசை குடும்பம் என்றால் அது இளையராஜாவின் குடும்பம். அவரும், அவரது சகோதரர் கங்கை அமரனும் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். கங்கை அமரனின் மகன்களில் வெங்கட் பிரபு லண்டனில் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து நடிக்க ஆரம்பித்தார். ஜி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படத்தில் இயக்குநராக அறிமுகமானார். இப்போது கோலிவுட்டில் ஃபேமஸான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

Premgi Amaran Indhu

பிரேம்ஜி அமரன்: அதேபோல் பிரேம்ஜியும் லண்டனுக்கு சென்று படித்துவிட்டு வந்து யுவன் ஷங்கர் ராஜாவிடம் வேலை செய்துகொண்டிருந்தார். பின்னணி பாடகராக இருந்த அவர், சிம்புவால் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு வெங்கட் பிரபுவின் படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி இன்னும் ரிலீஸாகாமல் இருக்கும் பார்ட்டி படத்துக்குக்கூட பிரேம்ஜி அமரன் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

முரட்டு சிங்கிள்: பிரேம்ஜி அமரனுக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டால், 'நான் ஒரு முரட்டு சிங்கிள்' என்றே கூறிவந்தார். அதுமட்டுமின்றி தான் அணிந்துவந்த டி ஷர்ட்டுகளிலும் முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். மேலும் படு ஜாலியான ஆள் பிரேம்ஜி. வீக் எண்ட் ஆனால் பார்ட்டி, வீக் டேஸில் வேலை என்று இருந்தவர். எனவே பிரேம்ஜி திருமணமே செய்துகொள்ளமாட்டார் என்றே பலரும் நினைத்தார்கள்.

திருமணம்: ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் என்று வெங்கட் பிரபு அறிவித்தார். கோலிவுட்டில் பெரிய தலைக்கட்டு குடும்பம் என்பதால் பிரேம்ஜியின் திருமணம் தடல்புடலாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இதிலும் ட்விஸ்ட்டாக திருத்தணி முருகன் கோயிலில் சிம்ப்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. வெங்கட் பிரபு தாலியை எடுத்துக் கொடுத்தார். பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.

சேலத்து பெண்: இந்து சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றிவரும் அவருக்கும், பிரேம்ஜிக்கும் முதலில் முகநூலில் பழக்கம் ஏற்பட்டு; பிறகு வாட்ஸ் ஆப் சாட்டில் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்துவுக்கு 25 வயதுதான் ஆகிறது என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் காதலுக்கு வயது இல்லைதானே.

இந்து இன்ஸ்டாகிராம்: இந்நிலையில் பிரேம்ஜி அமரனின் மனைவி இந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் பிரேம்ஜி அமரன் அடுப்பறையில் நின்று சமைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோவின் பின்னணியில், முத்து படத்தில் இடம்பெற்ற, 'அவரு யாருனு உனக்கு தெரியுமா?.. ஒரு காலத்துல அவரு எப்படி வாழ்ந்தவருனு தெரியுமா?' என்ற வசனம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X