Vadivelu - ஆசையாய் கேட்ட மகன்.. வாழ்வு கொடுக்கமாட்டேன் என்ற வடிவேலு.. ஒருமையில் விளாசித்தள்ளிய ராதிகா
சென்னை: வடிவேலு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் படுதோல்வியடைந்தது. மேலும் வடிவேலும் நகைச்சுவையும் எடுபடாமல் போனது. அடுத்ததாக அவர் ஃபகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த சூழலில் வடிவேலு குறித்து ராதிகா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான வடிவேலு 2011ஆம் ஆண்டு முதல் சறுக்கலை சந்தித்தார். விஜயகாந்த் மீது அவருக்கிருந்த தனிப்பட்ட பிரச்னையை அரசியல் மேடையில் பேசியதால் பிரச்னை மேற்கொண்டு முற்றியது. முக்கியமாக தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்த்தையே அவர் வார்த்தையால் பதம் பார்த்ததை பலரும் விரும்பவில்லை. அப்படிப்பட்ட சூழலில் ஆளுங்கட்சியாக அதிமுகவும், எதிர்க்கட்சியாக தேமுதிகவும் அமர்ந்தன. இதனையடுத்து வடிவேலுவை வைத்து படம் எடுக்க பலரும் தயங்கினார்கள்.

ஒதுக்கப்பட்ட புயல்; ஓய்ந்த பஞ்சாயத்து: அதன் காரணமாக கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார் வடிவேலு. அதன் பிறகு அவரை சுற்றி இருந்த பஞ்சாயத்துக்கள் ஓய்ந்ததன் காரணமாக நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்ததாக நடித்த மாமன்னன் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து நடித்த சந்திரமுகி 2 படம் சரியாக போகவில்லை. அடுத்து ஃபகத் பாசிலுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
தொடரும் சர்ச்சை: இரண்டாவது இன்னிங்ஸில் வடிவேலு பிஸியாக நடித்தாலும் அவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவருடன் பணியாற்றிய துணை நடிகர்கள் கொடுக்கும் பேட்டிகள் எல்லாம் வடிவேலுவுக்கு இப்படியும் ஒரு முகம் இருக்கிறதா என்று அதிர்ச்சி கிளப்பும் வகையிலேயே இருக்கின்றன. யாரையும் வளரவிடமாட்டார் என்று துணை நடிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு மளிகை கடை லிஸ்ட் போல் நீண்டு கொண்டே செல்கிறது.
உச்சக்கட்ட கோபம்: வடிவேலு மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட கோபம் வந்தது என்றால் விஜயகாந்த் இறப்பு விவகாரத்தில்தான். வடிவேலுவை வளர்த்துவிட்டவர்களில் விஜயகாந்த்தும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்டவர் இறந்ததற்கு வடிவேலு நேரில் வராதது விமர்சனத்தை எழுப்பியது. இருந்தாலும் அவர் வந்திருந்தால் கண்டிப்பாக பிரச்னை வந்திருக்கும் என சிலர் கூறினர். சரி நேரில் வந்தால்தானே பிரச்னை இரங்கலாவது தெரிவித்திருக்கலாமே அதைக்கூடவா செய்ய முடியாது என்று பெரும்பாலானோர் வடிவேலுவுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள்.
ஒருமையில் பேசிய சிவமணி: உதாரணமாக கலைஞர் 100 விழாவில் டிரம்ஸ் சிவமணி வடிவேலுவை ஒருமையில் பேசியதற்கு காரணமே; வடிவேலு - விஜயகாந்த் விவகாரத்தை மனதில் வைத்துதான் என ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். மேலும் இனிமேலாவது வடிவேலு தலைக்கனத்தில் அலையக்கூடாது என்றும் ஓபனாகவே கூறுகின்றனர்.
ட்ரெண்டாகும் ராதிகா பேச்சு: இந்நிலையில் நடிகை ராதிகா வடிவேலு குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு மேடையில் பேசிய அவர், "வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒருமுறை விமானத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் எங்கள் அப்பா படத்தில் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான்.
திமிர் பேச்சு: ஆனால் அவரோ சிரித்துக்கொண்டே, அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை ப்பா என்றார். இவரு வாழ்க்கை கொடுக்கிறாராம். இப்ப நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம். இத்தனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். சரத்குமார், விஜயகாந்த், பிரபு ஆகியோர் இருந்தால் தைரியமாக நான் ஷூட்டிங் செல்வேன். ஏனெனில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். ஒரு பிரச்னை என்றால் முன்னே வந்து நிற்பார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











