மண்டாடி படத்தில் சுமாரான கேரக்டர்.. நக்கல் மன்னன் சத்யராஜ்.. வீடியோவாக வெளியிட்ட நடிகர்

சென்னை: காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்றிருக்கும் நடிகர் சூரி தற்போது மண்டாடி என்ற புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சூரி எமோஷனல் ஆக பேசி கண்ணீர் வர வைத்தார். மேலும், முக்கியமான இயக்குநரின் பெயரை கூறிய சூரி அவர்தான் இந்த பட வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தார் என்றும் சூரி தெரிவித்தார். மேலும், இப்படம் பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாகவும் தெரிவித்தார்.

விடுதலை, விடுதலை 2 படத்திற்கு பிறகு காமெடி நடிகர் சூரி, நடிகராக மாறியுள்ளார். வடிவேலு, சந்தானம், யோகி பாபு வரிசையில் இவரும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோவாக கலக்கி வருகிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இளம் ஹீரோக்களுக்கே போட்டியாக வரும் சூரி தற்போது மண்டாடி என்ற புதிய படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்குகிறார். விடுதலை படத்தை தயாரித்த ஆர்எஸ் இன்பொடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், அச்சுயுத் குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

A video of Sathyaraj s performance in Soori s Mandaadi has been released

வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு: இப்படத்தின் அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சூரி, விடுதலை படத்திற்கு பிறகு என் வாழ்க்கையை மாற்றியவர் வெற்றிமாறன் அண்ணன். அதேபோன்று மண்டாடி பட வாய்ப்பையும் தந்தவர் அவர்தான். வெற்றிமாறன் தான் இந்த படத்திற்கான கதையில் நடிக்க சொன்னார். ஆனால், அவர் சொன்னதற்காக படத்தில் நடிக்க வில்லை. படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. நடுக்கடலில் நடக்கும் சேஷிங் பார்ப்பவர்களை வியப்பை தரும். கண்டிப்பாக இப்படம் மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், முத்துக்காளி கதாப்பாத்திரத்தில் சூரி நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திற்காக பல பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

என் கேரக்டர் சுமார் தான்: 90்களில் தமிழ் திரையுலகை வில்லன் மற்றும் கதாநாயகனாக கலக்கிய சத்யராஜ் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இளம் நடிகர்களோடு குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் சத்யராஜ். கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மண்டாடி படத்தின் இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்த சத்யராஜ் வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். அதில், என்னிடம் மண்டாடி படத்தை பற்றி படக்குழு தெரிவித்தபோது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால், படத்தின் இயக்குநர் மதிமாறன் லேப்டாப்பில் காண்பித்தார்.அதை பார்த்ததும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன். இந்த மாதிரி சமாச்சாரம் தமிழ்நாட்டில் நடந்திருப்பது தெரியாமல் இருந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இதை எப்படி படமாக எடுக்க போறாங்க என்பது மேலும் ஆச்சரியம்.

A video of Sathyaraj s performance in Soori s Mandaadi has been released

மண்டாடி படத்தில் எனது கதாப்பாத்திரம் சுமாராக இருந்தாலும் நடிக்க முடிவு பண்ணிட்டேன். அதில் அப்படி ஒரு விசயம் இருக்கிறது. எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா அப்புறும் சுவாரஸ்யம் இருக்காது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி காமெடியனாக நடித்தபோது சத்யராஜ் வித்தியாசமான வில்லனாக நடித்து பாராட்டை பெற்றார். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. சூரி ஹீரோவாகவும், சத்யராஜ் குணச்சித்திர நடிகராகவும் மாறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X