Maaveeran Pre Release - மாவீரன் ப்ரீ ரிலீஸ்.. செம ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்

சென்னை: Maaveeran Pre Release (மாவீரன் ப்ரீ ரிலீஸ்) மாவீரன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படமும், டான் படமும் அடுத்தடுத்து நூறு கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடுத்த வசூல் மன்னனாக சிவா வளர்வார் என அவரது ரசிகர்கள் கூறினர். ஆனால் இரண்டு படங்களுக்கு பிறகு அவர் நடித்த பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் எஸ்கே ரசிகர்கள் சோகத்தின் உச்சத்துக்கே சென்றனர். இருப்பினும் அடுத்த படத்தில் விட்டதை பிடித்துவிடுவார் என தெரிவித்தனர்.

A video of Sivakarthikeyan and Aditi Shankar dancing at Maveeran Pre Release

மாவீரன்: சூழல் இப்படி மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மடோன் இயக்கிய மண்டேலா படம் தேசிய விருது பெற்றதால் நிச்சயம் மாவீரன் கதை ரீதியாக வலுவாக இருக்கும். எனவே பிரின்ஸ் கொடுத்த அடியை மாவீரன் மூலம் மறந்துவிடலாம் என்ற ஆவலில் சிவாவும், அவரது ரசிகர்களும் இருக்கின்றனர்.

மாவீரன் ட்ரெய்லர்: மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் சென்னையில் நேற்று மாலை மாவீரன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இதனையடுத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.

A video of Sivakarthikeyan and Aditi Shankar dancing at Maveeran Pre Release

எப்படி இருக்கிறது ட்ரெய்லர்: படத்தில் சிவகார்த்திகேயன் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல் வானத்தை பார்த்த பிறகு உள்ளே ஒரு சூப்பர் பவர் இறங்கியது போல் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். எனவே படம் ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருக்குமோ என ரசிகர்கள் கணிக்க ஆரம்பித்து படம் நிச்சயம் மெகா ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை ட்ரெய்லரை பார்க்கும்போது ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆட்டம் போட்ட சிவகார்த்திகேயன்: இந்நிலையில் நேற்று நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மடோன் அஸ்வின் உள்ளிட்ட மாவீரன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அதேபோல் மாமன்னன் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிடோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் படத்தில் இடம்பெற்றிருக்கும் சீன் ஆ; சீன் ஆ பாடலுக்கு சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், பாபி மாஸ்டர் ஆடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதேபோல் விழாவுக்கு எஸ்கே வந்தபோது அவரது ரசிகர்கள் கொடுத்த பிரமாண்ட வரவேற்பு தொடர்பான வீடியோவும் வெளியாகி லைக்ஸை அள்ளிவருகிறது.

சிவகார்த்திகேயன் தான் ரஜினி: இதற்கிடையே விழாவில் பேசிய மிஷ்கின், "சிவகார்த்திகேயன் ரஜினி போல அடக்கமானவர் என்று நடிகை சரிதா என்னிடம் தெரிவித்தார். ஆனால் ரஜினி மாதிரியெல்லாம் சிவகார்த்திகேயன் இல்லை. அவர் ரஜினியேதான்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X