Vetrimaaran On Ajith - அஜித் மாதிரி எல்லோராலும் இருக்க முடியாது.. வெற்றிமாறன் ஷேரிங்ஸ்.. ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: Vetrimaaran On Ajith (அஜித் பற்றி வெற்றிமாறன்) அஜித் பற்றி வெற்றிமாறன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக இயக்கிய ஆடுகளம் படத்துக்கு தேசிய விருதை வென்றார். அந்தப் படத்திலிருந்து அவரது இயக்கத்திற்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. .இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக மாறினார் அவர்.

விவாதம்: வெற்றிமாறனின் படங்கள் என்றாலே அது சமூகத்துக்கு தேவையான கருத்தை சொல்லும் என்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதனாலேயே அவரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழும். குறிப்பாக அவர் இயக்கிய அசுரன் திரைப்படம் பஞ்சமி நிலம் குறித்து பேசி பெரும் விவாதத்தை சமூகத்தில் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விசாரணை படமும் காவல் துறையின் கோர முகத்தை காட்டியது.
விடுதலை: அசுரன் படத்துக்கு பிறகு சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கினார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை மையமாக வைத்து படத்தை அவர் உருவாக்கியிருந்தாலும் தன்னுடைய டச்சையும் அதில் சேர்த்திருந்தார். ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது என்பது கவனிக்கத்தக்கது.
விடுதலை 2, வாடிவாசல்: வெற்றிமாறன் இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய அடையாளமாக தமிழ் சினிமாவுக்கு இருக்கும் என்று இப்போதே பலரும் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
அஜித்துடன் வெற்றிமாறன்: இதற்கிடையே வெற்றிமாறன் விஜய்யுடன் இணையவிருப்பதாக தகவல் பரவியது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இன்னொரு தகவலும் ஓடுகிறது. அதாவது அஜித்திடம் வெற்றிமாறன் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும்; எல்ரெட் குமார் படத்தை தயாரிப்பார்; அது அஜித்தின் 64ஆவது படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் வீடியோ: இந்நிலையில் அஜித் குறித்து மங்காத்தா சமயத்தில் வெற்றிமாறன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் வெற்றிமாறன், “திரையுலக பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டவர். அதேபோல் தன்னுடைய மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அதைப்போல் எல்லோராலும் இருந்துவிட முடியாது. அந்த விஷயமும் அஜித்திடம் எனக்கு பிடிக்கும்” என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











