Shivarajkumar - ஜெயிலர் க்ளைமேக்ஸ்.. தொலைக்காட்சியில் ரீ க்ரியேட் செய்த சிவராஜ்குமார்..ட்ரெண்டிங் வீடியோ
பெங்களூர்: Shivarajkumar (சிவராஜ்குமார்) ஜெயிலர் க்ளைமேக்ஸில் நடித்த சீனை டிவி சேனல் நிகழ்ச்சியில் சிவராஜ்குமார் ரீ க்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகியிருக்கிறது. அதனால் ரசிகர்கள் பத்தாம் தேதியை தீபாவளி போல் கொண்டாடினார்கள். குறிப்பாக ரஜினிகாந்த்தை திரையில் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்றனர். படமும் அட்டகாசமாக இருந்ததால் அடுத்தடுத்த காட்சிகளில் படத்திற்கு கூட்டம் கூட ஆரம்பித்தது. இதன் காரணமாக வசூலிலும் முதல் நாளே ஜெயிலர் சாதனை படைத்தது.

வசூல் சாதனை: முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயை வசூலித்து பிற படங்களின் சாதனையை அடித்து நொறுக்கியது ஜெயிலர். தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களால் இரண்டாவது நாளிலேயே உலக அளவில் நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி படமானது 375 கோடி ரூபாயை தாண்டியிருக்கிறது.
பான் இந்தியா ஸ்டார்கள்: இந்தப் படத்தின் மூலம் பந்தயம் அடித்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தார் ரஜினிகாந்த். அதன் காரணமாக படம் பான் இந்தியா அளவில் வெளியானது. மேலும் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என பிற மொழிகளில் இருந்தும் ஸ்டார்கள் களமிறக்கப்பட்டனர். அவர்களுக்கு சரியான ஸ்க்ரீன் ஸ்பேஸை நெல்சன் திலீப்குமார் வழங்கியிருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கூறினர்.
ரீ க்ரியேட்: படத்தின் இறுதி தருவாயில் வாயில் சிகாருடன் வந்து எதுவுமே பேசாமல் பார்வையால் மட்டுமே சிவராஜ்குமார் ஸ்கோர் செய்தது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். அப்போது ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸில் அவர் நடித்த சீனை அந்த நிகழ்ச்சியின் செட்டில் ரீ க்ரியேட் செய்தார். அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
கேப்டன் மில்லர்: இதற்கிடையே சிவராஜ்குமார் தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லரிலும் நடித்திருக்கிறார்.. ஜெயிலர் போல் இல்லாமல் அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் நடித்திருக்கிறார். முக்கியமாக தனுஷுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலரில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து அப்ளாஸை அள்ளியவர் கேப்டன் மில்லரில் என்ன மாதிரியான சம்பவம் செய்திருக்கிறாரோ என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











