Leo Audio Launch - லியோ ஆடியோ லான்ச் ப்ரோமோ இதுவா?.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ லான்ச்) லியோ ஆடியோ லான்ச்சின் ப்ரோமோ இதுதான் என்று ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் நடித்திருக்கும் லியோ படம்தான் நேற்றிலிருந்து ஹாட் டாபிக். அதற்கு காரணம் அந்தப் படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதுதான். லியோ ஆடியோ லான்ச்சுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்று கூறப்பட்ட சூழலில் அதற்கான பாஸ்களும் தயாராகிவிட்டன. மேலும் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக சில புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் அது வாரிசுக்காக நடந்த பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ஒரு தகவல் பரவியது.

A video trending on the internet is the Leo Audio launch promo

என்ன காரணம்?: ஆனால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்துவிட்டது. மேலும் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

உச்சக்கட்ட அதிர்ச்சி: ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை" என குறிப்பிட்டிருந்தது. இது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது. மேலும் இணையத்தில் We Stand With Leo என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

அரசியல் அழுத்தமா?: விஜய் எதிர்காலத்தில் அரசியலில் நுழையப்போகிறார் என்றுதான் கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அதற்கான அச்சாரத்தை லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவார் என்று கருதிய சிலர்; இன்னொரு நடிகரை அரசியலுக்குள் வரவிடக்கூடாது என்று திட்டமிட்டே அழுத்தம் கொடுத்ததன் காரணமாகத்தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக ஒருசிலர் கூறிவருகின்றனர். ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் ப்ரோமோ இதுதான் என்ற கூறி ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவின் பின்னணியில் லியோ படத்தின் நா ரெடிதான் வரவா பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அனிமேஷனில் விஜய் கெத்தாக கையில் வாளுடன் தீப்பறக்க நடந்துவருவது போன்று இருக்கிறது. அதனையடுத்து அதை ஓங்கி அடித்து ஊன்றிய பிறகு மைக்காக மாறுகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ப்ரோமோ வீடியோவே வேற லெவலுல இருக்குமே நிகழ்ச்சி நடந்திருந்தா எப்படி இருந்திருக்கும் என கூறி அதனை அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

வீடியோ வெளியிடுவாரா விஜய்?: இதற்கிடையே லியோ படத்தின் ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதால் அவரது ரசிகர்கள் வேறு ஒரு கோரிக்கையை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது, விஜய் ஆடியோ லான்ச்சில் என்ன பேசலாம் என திட்டமிட்டிருந்தாரோ அதனை ஒரு வீடியோவில் பேசி வெளியிட வேண்டும் என்று கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X