twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்.. இசைக் கச்சேரியில் பகீர்!

    |

    பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹம்பியில் இசை நிகழ்ச்சியின் போது கன்னடப் பாடலைப் பாடாத பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பாடகர் கைலாஷ் கெர். அவர் இந்திய நாட்டுப்புற பாடல், சூஃபி பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

    பாடகர் கைலாஷ் கெர் 2017ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான இரண்டு ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

    தென்னிந்திய படங்களில் கதை தான் ஹீரோ..ஆனால்,பாலிவிட்டில்? அனுபம் கெர் நச் பதில்!தென்னிந்திய படங்களில் கதை தான் ஹீரோ..ஆனால்,பாலிவிட்டில்? அனுபம் கெர் நச் பதில்!

    பாடகர் கைலாஷ் கெர்

    பாடகர் கைலாஷ் கெர்

    பாடகர் கைலாஷ் கெர் 2006ம் ஆண்டு வெளியான ஃபனா படத்தில் "Chand Sifarish" என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆனார். முதல் பாடலே இவருக்கு சிறந்த பாடகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. அவரது கம்பீரமான குரல் மற்றும் தனித்துவமான இசை பாணியால் இந்தியாவின் மிகவும் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவரானார் கைலாஷ் கெர்.

    தமிழில் பல ஹிட் பாடல்கள்

    தமிழில் பல ஹிட் பாடல்கள்

    இவர், அபியும் நானும் படத்தில் வரும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஐய்யா, உன் சமையல் அறையில் படத்தில் "இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது" அரண்மனை 2 படத்தில் "மாயா மாயா" பாடல், மிஸ்கின் இயக்கத்தில் உருவான சைகோ படத்தில் இளைய ராஜாவின் இசையில், "தாய்மடியில் நான் தலையை" , மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.

    பாடகர் மீது பாட்டில் வீச்சு

    பாடகர் மீது பாட்டில் வீச்சு

    இந்நிலையில், பெங்களூரில் முன்னாள் விஜயநகரப் பேரரசின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் ஹம்பி உத்சவ் கர்நாடக அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நேற்று நிறைவு விழாவில் பாடகர் கைலாஷ் கெர் ஹிந்தி பாடல்களை மட்டும் பாடிக்கொண்டு இருந்தால், ஆத்திரம் அடைந்த சில விஷமிகள் பாடகர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி தாக்கினர்.

    இருவர் கைது

    இருவர் கைது

    தண்ணீர் பாட்டில் தன்னை நோக்கி வந்த போதும், பாடகர் கைலாஷ், கவனம் சிதறாமல் தொடர்ந்து பாடலை பாடிக்கொண்டே இருந்தார். இதையடுத்து, சில வினாடிகளிலேயே மேடைக்கு சென்று பாதி நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டிலை மேடையில் இருந்து அகற்றினார். இவ்விவகாரம் குறித்து பிரதீப் மற்றும் சுரா என்ற இரு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாட்டில் வீசப்பட்ட விவகாரம் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Singer Kailash Kher faced heckling at a concert in Karnataka's Hampi on Sunday allegedly for not singing any Kannada song
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X