மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் போஸ்டரை கிழித்து இறைச்சி வியாபாரிகள் போராட்டம்.. பகீர் காரணம்!
கோயம்புத்தூர்: பிகில் பட போஸ்டரை கிழித்து கோவையில் இறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பிகில் படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது.இந்த படம் தொடர்பாக கடந்த வாரம் வரை நான்கு போஸ்டர்கள் வெளியானது.
முதல் போஸ்டரில் இரண்டு விஜய் இருக்கும் புகைப்படம் இருந்தது. அது பெரிய வரவேற்பை பெற்றது. வயதான விஜய், இளம் விஜய் கெட்டப்கள் அதில் இருந்தது.

அடுத்து என்ன
அதன்பின் கால்பந்து வீராங்கனை ரோலில் நடித்துள்ள இந்துஜா உள்ளிட்ட நடிகைகளுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதேபோல் படத்தில் உள்ள மற்ற ஆண் நடிகர்கள், துணை நடிகர்கள் உடன் விஜய் இருக்கும் இன்னொரு புகைப்படம் வெளியானது.

பிகில்
இந்த நிலையில் பிகில் படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் இறைச்சி வியாபாரிகளை அசிங்கப்படுத்திவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் காலில் செருப்புடன் அமர்ந்து இருக்கிறார். அவர் தனது செருப்பு காலை இறைச்சி வெட்டும் கட்டை மீது வைத்துள்ளார்.

இறைச்சி கடை
இறைச்சி வெட்டும் கட்டை மீது விஜய் இப்படி கால் வைத்து இருப்பதுதான் சர்ச்சையாகி உள்ளது. எங்கள் தொழிலை அவர் இழிவுபடுத்திவிட்டார். நாங்கள் இப்படி எல்லாம் செய்ய மாட்டோம். எங்கள் தொழிலில் வன்முறைக்கும் இடமில்லை. நாங்கள் இப்படி நடந்து கொள்ள மட்டோம்.

பிகில் போஸ்டர்
இதனால் பிகில் பட போஸ்டர் தங்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று கறிக்கடை உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் குதித்துள்ளது. பிகில் பட போஸ்டரை கிழித்து அவர்கள் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக கோவையில் கறிக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் கோபால் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











