»   »  கபாலியில் ரஜினிக்கு வில்லனே ஒரு பெண்தானாமே!

கபாலியில் ரஜினிக்கு வில்லனே ஒரு பெண்தானாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாகவே ரஜினி படங்களில் அவருக்கு இணையான முக்கியத்துவம் வில்லன் வேடத்தில் நடிப்பவர்களுக்கும் வழங்கப்படும். அப்படி இருந்தால்தான் ஹீரோ வேடம் எடுபடும் என்பதை உணர்ந்து முக்கியத்துவம் தரச் சொல்வாராம் ரஜினி.

முரட்டுக்காளையிலிருந்து இதைப் பார்த்து வருகிறோம்.


பாட்ஷா ரகுவரனையும், படையப்பா நீலாம்பரியையும் மறக்க முடியுமா?


A woman is villain for Kabali Rajini

இப்போது ரஜினி நடித்துவரும் கபாலி படத்தில் ரஜினிக்கு எதிராக நடிக்கப் போகிறவர் ஒரு ஆண் வில்லன் அல்ல. பெண் வில்லி!


பெரிய டானாக நடிக்கும் ரஜினிகாந்துக்கு மகளாக தன்ஷிகா நடிக்கிறார். ஹீரோயினாக ராதிகா அப்தே நடிக்கிறார்.


முக்கிய ரோலில் மெட்ராஸ் புகழ் ரித்விகா நடிக்கிறார். மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் ரித்விகா. இவரது நடிப்பை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பாராட்டியிருக்கிறார் ரஜினி.


இந்தப் படம் படையப்பா நீலாம்பரிக்கு நிகராகப் பேசப்படும் என்கிறார்கள் கபாலி குழுவிலிருப்பவர்கள்.

English summary
According to sources, there is a powerful female character created against Rajini in Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil