என்ன இந்தப் பொண்ணு பச்ச பச்சயா பேசுது.. ஸ்டாண்ட்அப் காமெடி எங்கே போய் நிக்குது பாருங்க
சென்னை: நகைச்சுவைகளில் ஸ்டாண்ட் அப் காமெடி ஒரு வகை. பலர் தற்போது ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். தனியாக ஒரு அரங்கு அமைத்து மேடையில் நின்றபடி மணிக்கணக்காக காமெடி செய்வது உண்டு. அது மக்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் அது ஓவர் டோஸாகி கடுமையான விமர்சனத்தையும் சந்திப்பது. அப்படித்தான் ஒரு பெண் செய்த ஸ்டாண்ட் அப் காமெடியும் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது.
மனிதனுக்கு சிரிப்பு ரொம்பவே முக்கியம். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற ஒரு பழமொழியே தமிழில் உண்டு. அதனால்தான் காலங்காலமாக சினிமாவில் நகைச்சுவைக்கென்று முக்கிய இடத்தை மக்கள் கொடுத்துவருகிறார்கள். காலம் செல்ல செல்ல திரைப்படத்தில் மட்டுமின்றி தனியாக காமெடி ஷோ நடத்தும் நிலையும் உருவானது. தங்களது மன நெருக்கடி, பிரச்னைகளிலிருந்து கொஞ்ச நேரமேனும் வெளியில் வருவதற்கு அந்த காமெடி ஷோவுக்கும் மக்கள் செல்ல ஆரம்பித்தார்கள்.

ஸ்டாண்ட் அப் காமெடி: அப்படி ஸ்டாண்ட் அப் காமெடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மணிக்கணக்காக நகைச்சுவை கலைஞர்கள் மேடையில் நின்றபடி சொல்லும் ஜோக்குகளுக்கு மக்கள் வாய் விட்டு சிரிப்பார்கள். இப்போது தனியாக ஸ்டாண்ட அப் காமெடி ஷோ நடக்கும் வழக்கம் இருந்தாலும் சில வருடங்களுல்க்கு முன்பு பட்டிமன்றத்திலேயே காமெடியாக பேசி கைத்தட்டலை அள்ளிப்போகும் பேச்சாளர்கள் இருந்தார்கள்.
ராஜா, திண்டுக்கல் லியோனி: உதாரணமாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியை சொல்லலாம். ராஜா சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கு அப்பாவாக நடித்தவர். திண்டுக்கல் லியோனியும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ராஜா போகிறபோக்கில் அடிக்கும் கமெண்ட்டுகளும், சம்பவங்களாக சொல்லும் நகைச்சுவைகளும் 90களிலும் 2000த்தின் ஆரம்பத்திலும் வெகுவாக ரசிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்தான் திண்டுக்கல் லியோனியும். பட்டிமன்ற நடுவராக இருந்தாலும் பேச்சாளர்கள் பேசி முடித்த பிறகு அடிக்கும் கமெண்ட்டுகளும், அவர் சொல்லும் ஜோக்குகளும் ரசிக்கப்பட்டன. ஆனால் அவர்களுடையே ஜோக்கில் ஆபாசமோ, முகம் சுளிக்கும்படியான கருத்துக்களோ பெரும்பாலும் வந்ததில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இப்போது நிலைமையோ வேறாக இருக்கிறது.
தற்போதைய ஸ்டாண்ட் அப் காமெடி: இப்போதும் ஸ்டாண்ட் அப் காமெடியை டீசண்ட்டாக செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில்கூட மதுரை முத்து வெளிநாடு ஒன்றில் செய்த ஸ்டாண்ட் அப் காமெடியில் ஸ்பெஷல் அர்ச்சனை தொடர்பாக பேசியிருந்தார். அதுவும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. ஆனால் சிலரோ எல்லை மீறி செல்கிறார்கள். உதாரணமாக விக்கல்ஸ் யூட்யூப் சேனலை சேர்ந்த ஒருவர் செய்த ஸ்டாண்ட் அப் காமெடியில் கிறிஸ்தவ பள்ளிகளை மத ரீதியாக சீண்டியிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நடிகை ஷ்யாமா ஹரிணி செய்திருக்கும் ஸ்டாண்ட் அப் காமெடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் அவர், அந்தரங்கமாக நான்கு சுவர்களுக்குள் நடக்கும் காமம் தொடர்பான விஷயத்தை வெளிநாட்டவர்களையும், உள்நாட்டவர்களையும் கம்ப்பேர் செய்து ஆபாசமாக பேசியிருக்கிறார். மேலும், நம்ம ஊர் காரங்க என்ன ஜானி சின்ஸ், மியா கலிஃபாவா என்று ஆபாச பட நடிகர்களையும் இணைத்து பேசியிருக்கிறார். அதனை சின்னத்திரையில் பிரபலமாக இருந்து பாபா பிளாக் ஷிப் என்ற படத்தின் இயக்கிய ராஜ்மோகன் கைத்தட்டி சிரித்து ரசித்திருக்கிறார்.
அந்தப் பெண் அப்படி பேசியதற்கு அரங்கில் இருந்தவர்களும் தங்களது எதிர்ப்பையோ முக சுளிப்பையோ காட்டாமல் கைத்தட்டி சிரித்து ரசித்ததை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதேசமயம் அந்தப் பெண் செய்த ஆபாசமான ஸ்டாண்ட் அப் காமெடிக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுக்க தொடங்கியிருக்கின்றன. நகைச்சுவை என்பது மன அழுத்ததையும், மன உளைச்சலையும் போக்குவதற்கானது. ஆனால் இப்போதெல்லாம் செய்யப்படும் இதுபோன்ற காமெடிகளை பார்த்தால் மன அழுத்தமும், கோபமும்தான் உருவாகிறது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். ஷ்யாமா ஹரிணி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமான வேற மாறி ஆஃபிஸ் வெப் தொடரில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











