மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார்..மலையாள நடிகர் மீது இளம் நடிகை பாலியல் புகார்!

கேரளா : மலையாளத்தில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கும் நடிகர் விஜய் பாபு மீது இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

லிப்ஸ் அண்ட் த மங்கி பென், பெருச்சாழி, ஆடு , முத்துகவு, ஆடு 2 மற்றும் ஹோம் ஆகிய படங்களைத் தயாரித்து நடித்து பிரபலமானவர் விஜய் பாபு

இவர் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

ஏப்ரல் 22-ம் தேதி விஜய் பாபு மீது கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஜய்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

அத்துமீறினார்

அத்துமீறினார்

சினிமா துறையில் எனக்கு யாரையும் தெரியாது. விஜய பாபு, சினிமா படவாய்ப்பு குறித்து அறிவுரைகளை கூறி நட்பாக பழகினார். இதனால், அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர் என்னிடம் அத்துமீறத் தொடங்கினார்.

மது கொடுத்து பலாத்காரம் செய்தார்

மது கொடுத்து பலாத்காரம் செய்தார்

நான் சுயநினைவுடன் இருந்தால், உடலுறவுக்கு சம்மதிக்க மாட்டேன் என்பதால், மது மற்றும் போதை மாத்திரைகளை கொடுத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி என்னை ஏமாற்றியுள்ளார்.

மிரட்டினார்

மிரட்டினார்

மேலும், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால், அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார். இதற்காகத்தான் இத்தனை நாட்கள் நான் பயந்து இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், வாயை மூடிக்கொண்டு இனியும் இந்த வலியை என்னால் அனுபவிக்க முடியாது என்பதால் துணிந்து புகார் கொடுக்க வந்துள்ளதாக நடிகை கூறினார்.

பல பிரிவுகளின் கீழ் வழக்கு

பல பிரிவுகளின் கீழ் வழக்கு

நடிகை அளித்த புகாரின் பேரில் எர்ணாகுளம் போலீசார், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376, 506 மற்றும் 323ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் பாபு மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவாக உள்ளதை அதையடுத்து போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

பேஸ் புக் லைவில் பேசிய விஜயபாபு, அந்த நடிகையை 2018-ம் ஆண்டு முதல் தனக்கு தெரியும் என்றும் ஆடிஷனில் தேர்வானதால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான படங்களில் நடிக்க வாய்ப்புகள் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த நடிகை மன உளைச்சலில் இருப்பதாகவும்,அவர் அனுப்பிய ஏராளமான மெசேஜ்கள் தன்னிடம் இருப்பதாகவும், நடிகை தொடர்ந்திருக்கும் வழக்கை எதிர்த்து மான நஷ்ட வழக்கு தொடுக்க போவதாகவும் விஜய் பாபு பேஸ் புக் நேரலையில் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X