வாவ்.. இதை எதிர்பார்க்கவே இல்லையே.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல இளம் நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4க்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியாயின.

அந்த டீசர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது டீசர் அட்டகாசம் என புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.

இம்மாத இறுதிக்குள்

இம்மாத இறுதிக்குள்

இந்த டீசர்களின் மூலம் கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என கூறப்படுகிறது.

பலரின் பெயர்

பலரின் பெயர்

பிக்பாஸ் 4 தொடர்பான பேச்சு எழுந்ததுவுடனேயே, யாரெல்லம் பங்கேற்கே போகிறார்கள் என அனுமானத்தின் அடிப்படையில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். சினிமா ஹீரோயின்கள் முன்னாள் ஹீரோயின்கள், சர்போட்டிங் ஆர்ட்டிஸ்டுகள் டிவி நடிகர்கள் என பலரின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.

டிக்டாக் இலக்கியா

டிக்டாக் இலக்கியா

இதில் சில நடிகைகள் நாங்கள் பங்கேற்க போவதில்லை என தடாலடியாக மறுத்து விட்டனர். சிலர் சம்பந்தமே இல்லாமல் ஏன் என்னுடைய பெயரையெல்லாம் இழுக்கிறீர்கள் என கோபப்பட்டனர். ஏற்கனவே டிக்டாக் இலக்கியாவின் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிப்பட்டது.

இளம் ஹீரோயின்

இளம் ஹீரோயின்

ஆனால் அவரை பிக்பாஸ் குழு நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஒரு கோடி ரூபாய் கேட்ட ஷில்பா மஞ்சுநாத்துக்கும் விஜய் டிவி எண்ட் கார்டு போட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக பெரும் பிரபலமான இளம் நடிகை ஒருவரின் பெயர் அடிப்பட்டுள்ளது.

லக்ஷ்மி மேனன்

லக்ஷ்மி மேனன்

அதாவது, கும்கி, சுந்தரப்பாண்டியன், பாண்டியநாடு, கொம்பன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்த லக்ஷ்மி மேனன் அது. நடிகை லக்ஷ்மி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் நடிகை லக்ஷ்மி மேனன் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

மலையாள நடிகையான லக்ஷ்மி மேனன், சுந்தரப்பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, கும்கி, குட்டிப்புலி, ஜிகர்தண்டா, மிருதன், பாண்டியநாடு, வேதாளம், கொம்பன் நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

குண்டானதால்..

குண்டானதால்..

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் றெக்க. அதன் பிறகு லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. ராசியான நடிகை என பெயர் வாங்கிய நடிகை லக்ஷ்மி மேனன், உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருந்ததாலேயே ஓரங்கட்டப்பட்டார்.

 செம ஸ்லிம்

செம ஸ்லிம்

அதனை தொடர்ந்து நடனம் கற்பதில் கவனம் செலுத்தி வருகிறார் லக்ஷ்மி மேனன். அவ்வப்போது தன்னுடைய போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். அண்மையில் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக இருக்கும் போட்டோக்கள் வைரலானது.

Recommended Video

கண்ணதாசனின் காதலிகள் | REWIND RAJA EP-06 |THIRUMATHI JAYANTHI KANNAPPAN CHAT PART-03|FILMIBEAT TAMIL
மீண்டும் ஒரு ரவுண்ட்

மீண்டும் ஒரு ரவுண்ட்

சில ஆண்டுகளாய் பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளார் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் பிக்பாஸ் நிழ்ச்சியில் பங்கேற்க லக்ஷ்மி மேனனிடம் நிகழ்ச்சி குழு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம் என்பதால் லக்ஷ்மி மேனனும் ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X