பலவித வைரஸ் வில் கம் & கோ.. கொஞ்சம் கேர்ஃபுல் மாப்பி.. இந்த குட்டிப் பையனோட கோவிட் ஸ்டோரிய கேளுங்க!
சென்னை: கொரோனா வைரஸ் குறித்து ஒரு குட்டிப் பையன் குட்டி ஸ்டோரி மெட்டில் பாடியிருக்கும் கோவிட் ஸ்டோரி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை முடக்கி போட்டு வைத்துள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு போட்டு 20 வினாடிகளுக்கு மிகாமல் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு மீட்டர் இடை வெளியில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் குஷியில் உள்ளனர் குழந்தைகள். இந்நிலையில் லோகி என்ற சிறுவன், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலின் மெட்டில் கோவிட் ஸ்டோரி பாடலை பாடியிருக்கிறார்.
பலவித வைரஸ் வில் கம் & கோ.. கொஞ்சம் கேர்ஃபுல் மாப்பி.. வெளியே போனா ஹேன்ட் வாஷ் மஸ்ட்.. ட்ராவல் எல்லாத்தையும் தள்ளி வை பேபி.. என கொரோனா வைரஸ்க்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்தி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











