»   »  நடிகையை ஆள் வைத்து மானபங்கப்படுத்தியது ஒரு இளம் இயக்குனரா?

நடிகையை ஆள் வைத்து மானபங்கப்படுத்தியது ஒரு இளம் இயக்குனரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இளம் மலையாள இயக்குனர் ஒருவர் ஆள் வைத்து நடிகையை கடத்தி அசிங்கப்படுத்தியதாக பேசப்படுகிறது என்று மங்கலம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகையை காரில் கடத்தி மானபங்கப்படுத்திய வழக்கில் பல்சர் சுனி உள்பட 6 பேரை கேரளா போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப்பிடம் கடந்த வாரம் 13 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

திலீப்

திலீப்

நடிகையின் கடத்தலுக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறி வருகிறார் திலீப். மேலும் நடிகையின் விஷயத்தில் உண்மையை கண்டறியுமாறு போலீசில் மனுவும் அளித்துள்ளார் அவர்.

இயக்குனர்

இயக்குனர்

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் மலையாள இயக்குனர் ஒருவர் நடிகையிடம் கேட்க அவர் மறுத்துவிட்டாராம். இதனால் கடுப்பான இயக்குனர் தான் ஆள் வைத்து நடிகையை அசிங்கப்படுத்தியதாக மங்கலம் எனும் மலையாள செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

பெரிய மீன்கள்

பெரிய மீன்கள்

நடிகை விஷயத்தில் பெரிய மீன்களுக்கு அதாவது பெரிய ஆட்களுக்கு தொடர்பு உள்ளது என்று பல்சர் சுனி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சின்ன மீன் வெளியே வந்துள்ளது என்கிறது மங்கலம் இணையதளம்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

மானபங்க விவகாரத்தால் அதிர்ச்சியில் இருந்த நடிகைக்கும், அவர் காதலித்து வந்த கன்னட சினிமா தயாரிப்பாளரான நவீனுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to a malayalam news portal, a young director is behind the popular actress abduction.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil